விவசாயத்துறை அமைச்சகம்

3,83,631 எக்டர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைள்

Posted On: 22 JUL 2020 5:20PM by PIB Chennai

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் 1,95,450 எக்டர் நிலப்பரப்பில், 2020 ஏப்ரல் 11 முதல் ஜூலை 21 வரை, வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், வெட்டுக்கிளி வட்டார அலுவலகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. 2020 ஜூலை 21 வரை, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹரியானா, உத்ரகாண்ட், பிகார் ஆகிய மாநிலங்களில், 1,88,181 எக்டர் நிலப்பரப்பில், அந்தந்த அம்மாநில அரசுகள் வாயிலாக வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது 104 கட்டுப்பாட்டுக் குழுக்களும், 200 மத்திய அரசுப் பணியாளர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15 ட்ரோன் கருவிகளுடன் 5 நிறுவனங்களும் இப்பணியைச் செய்து வருகின்றன. இந்திய விமானப்படையும் எம்ஐ-17 ஹெலிகாப்டர் வாயிலாக வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்தும் பணியைச் செய்து வருகிறது.

 

*****



(Release ID: 1640604) Visitor Counter : 185