நித்தி ஆயோக்

இந்தியா –அமெரிக்கா எரிசக்திக் கூட்டாண்மை; நிலைத்த வளர்ச்சித் தூண் இந்திய எரிசக்தி மாடலிங் அமைப்பு 2020 ஜூலை 2-ஆம் தேதி தொடக்கம்

Posted On: 21 JUL 2020 7:16PM by PIB Chennai

நிலைத்த வளர்ச்சித் தூண் என்பது, நிதிஆயோக் மற்றும் அமெரிக்க உதவி தலைமையிலான  இந்தியா - அமெரிக்க மூலோபாய எரிசக்திக் கூட்டாண்மையில் முக்கிய தூணாகும். இது, எரிசக்தித் தரவு மேலாண்மை, எரிசக்தி மாடலிங், குறைந்த கார்பன் தொழில்நுட்பவியல் ஆகிய மூன்று முக்கிய செயல்பாடுகளைக் கொண்டாகும்.

நிலைத்த வளர்ச்சித் தூண் குறித்த கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் 2020 ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா எரிசக்தி மாடலிங் அமைப்பு தொடங்கப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில், எரிசக்தி மாடலிங் அமைப்புகள் உள்ளன. அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இந்த அமைப்பு 1976-இல் தொடங்கப்பட்டது. முன்னணி மாடலிங் நிபுணர்கள், அரசின் முடிவுகளை எடுப்பவர்கள், தொழில்துறை, பல்கலைக்கழகங்கள், இதர ஆராய்ச்சி அமைப்புகளை இணைப்பதே இதன் பணியாகும். எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலை சார்ந்த சமகால பிரச்சினைகளை விவாதிக்கும் பாரபட்சமற்ற தளமாக இது அமைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை அமைப்பு மற்றும் முறையான செயல்பாடு கொண்ட மாடலிங் அமைப்பு இல்லை. இருப்பினும், TERI, IRADe, CSTEP, CEEW, NCAER போன்ற பல்வேறு சிந்தனை/ஆராய்ச்சி ஆமைப்புகள் தொடர்ச்சியாக காட்சிகளை உருவாக்கி மாடலிங் படிப்புகளுக்கு பங்களித்து வந்துள்ளன. நிதிஆயோக் உள்ளிட்ட சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் பொருத்தமான அமைச்சகங்களுக்கு ஆய்வுகள் குறித்த தகவல்களை இவை அளித்து வருகின்றன.

 

இந்திய எரிசக்தி மாடலிங் அமைப்பு பின்வரும் முயற்சிகள் மற்றும் நோக்கத்தை நிறைவேற்றும்;

•           எரிசக்தி, சுற்றுச்சூழல் சார்ந்த முக்கியமான பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்கான தளத்தை வழங்குகிறது.

•           முடிவெடுக்கும் நடைமுறைகளை இந்திய அரசுக்கு அளிக்கும்.

•           மாடலிங் குழுக்கள், அரசு, அறிவுசால் கூட்டாண்மை, நிதியாளர்கள் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும்.

•           யோசனைகளைப் பகிர்தல், உயர்தரமான படிப்புகளுக்குப்  பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வசதிகள்.

•           பல்வேறு மட்டங்கள், பல்வேறு பகுதிகளில் உள்ள அறிவுசால் இடைவெளியைக்  கண்டறிதல்.

•           இந்திய நிறுவனங்களின் திறனைக் கட்டமைத்தல்.

இந்த அமைப்பின் செயல்பாடுகளை ஆரம்பத்தில் நிதிஆயோக் ஒருங்கிணைத்து, அதன் நிர்வாக அமைப்பை இறுதி செய்யும். அறிவுசால் கூட்டாளிகள், தரவு முகமைகள், தொடர்புடைய அமைச்சகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த அமைப்பு இருக்கும்..

 

 ****


(Release ID: 1640272) Visitor Counter : 193