சுற்றுலா அமைச்சகம்
மத்திய சுற்றுலா அமைச்சகம் தனது 42-வது வெபினாரை “மாயமான முக்கோணம் - மகேஸ்வர், மண்டு மற்றும் ஓம்கரேஷ்வர்” என்ற தலைப்பில் தேக்கோ அப்னா தேஷ் தொடர்களின் கீழ் நடத்துகிறது
Posted On:
20 JUL 2020 12:56PM by PIB Chennai
மத்திய சுற்றுலா அமைச்சகம், இந்திய அரசின் தேக்கோ அப்னா தேஷ் வெபினார் தொடர்களை, “மாயமான முக்கோணம் - மகேஸ்வர், மண்டு மற்றும் ஓம்கரேஷ்வர்” என்ற தலைப்பில் ஜூலை 18 2020 அன்று ஏற்பாடு செய்திருந்தது.
இந்தூர் வருமான வரி ஆணையர் திருமிகு. ஆஷிமா குப்தா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த சந்தைப்படுத்தல் நிபுணர் திருமிகு. சரிதா ஆலுர்கர் ஆகியோரால் வழங்கப்பட்ட வெபினார், மாய முக்கோணத்தின் கீழ் உள்ள இடங்களின் செழுமையை வெளிப்படுத்தியதுடன், மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைதியான, வசீகரிக்கும் இடங்களுடன் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அதாவது மகேஸ்வர், மண்டு & ஓம்கரேஷ்வர். தேக்கோ அப்னா தேஷ் வெபினார் தொடர் என்பது ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரதத்தின் கீழ் இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும், மேலும் இது மெய்நிகர் தளம் மூலம் ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரதத்தின் ஆன்மிக உணர்வை தொடர்ந்து பரப்பி வருகிறது.
மகேஸ்வரில் உள்ள மலைத்தொடர்கள், சூரிய உதயம் மற்றும் சூரியன் மறைவின் போது அழகைக் காண சிறந்த இடங்களாகும், மேலும் கோட்டை வளாகத்தையும் அஹில்யா காட்டிலிருந்து மிகச் சிறப்பாக காணமூடியும். மாலைப்பொழுதில் ஒருவர் படகு சவாரி செல்லலாம், சூரியன் மறைவிற்குப் பிறகு படகோட்டிகள் சிறிய ஒளிச்சுடரை ஏந்தி நர்மதா நதியைப் பிரகாசிக்கச் செய்கிறார்கள். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பனேஷ்வர் கோயில் மகேஷ்வரின் கோயில்களில் கண்டிப்பாக, குறிப்பாக சூரியன் மறைவின் போது காண வேண்டிய காட்சியாகும். நர்மதா மலைத் தொடரில் சூரியன் மறைவிற்குப் பின்னர் நர்மதாவுக்கு ஆரத்தி எடுக்கபடுகிறது..
ஜவுளிகள் என்பது அஹில்யா தேவியால் உருவாக்கப்பட்ட மற்றொரு முக்கியமான அம்சமாகும், சூரத் மற்றும் தென்னிந்தியாவிலிருந்து மாஸ்டர் நெசவாளர்களை அவர் அழைத்து, ஏற்கனவே இருக்கும் புடவைகளில் இருந்து தனித்துவமான புடவைகளை நெசவு செய்யக் கேட்டுக்கொண்டார். இவற்றில் பயன்படுத்தப்படும் வடிவமைப்புகள் கோட்டை கட்டிடக்கலை மற்றும் நர்மதா நதியின் உள்ளுணர்வுகளாகும். இவை அரச குடும்பத்தினரின் விருந்தினர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டன.
ஹோல்கர் தேவி அகிலியா ராஜ்மாதா கலைகளின் தாராள புரவலராகும்.. அவர் புடவைகளை மிகவும் நேசித்தார், 1760 ஆம் ஆண்டில் சூரத்தின் புகழ்பெற்ற நெசவாளர்களை தனது ராஜ்யத்தை அரச குடும்பத்திற்கு தகுதியான செழுமைமிக்க துணியால் வளப்படுத்துவதற்காக அனுப்பிவைத்தார். சுதேச அரசின் கீழ் நெசவாளர் கலைகள் செழித்து , இன்றைய மகேஸ்வரி துணியால் தனித்துவம் பெற்றன. ஒருமுறை அனைத்து பருத்தி நெசவுகளும் – 1950-களில் பட்டுச் சுருள்களில் பயன்படுத்தத் தொடங்கி, காலப்போக்கில் நெறியாக மாறியது. 1979-இல், மகேஸ்வரின் நெசவாளர்களின் நலனுக்காக லாப நோக்கின்றி இயங்கும் ரெஹ்வா சங்கம் நிறுவப்பட்டது,
வெபினார் குறித்து, கூடுதல் தலைமை இயக்குநர் திரு. ரூபிந்தர் ப்ரார் சுருக்கமாக கருத்து தெரிவிக்கையில், சுற்றுப்பயணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன் விலைமதிப்பற்ற அனுபவத்தையும் தருவதாகக் குறிபிட்டார்.
வெபினார் அமர்வுகள் தற்போது வழங்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் கிடைக்கின்றன:
https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured
http://tourism.gov.in/dekho-apna-desh-webinar-ministry-tourism
https://www.incredibleindia.org/content/incredible-india-v2/en/events/dekho-apna-desh.html
வெபினார்களின் அமர்வுகள் இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் அனைத்து சமூக ஊடகக் கையாளுதல்களிலும் கிடைக்கின்றன.
வைசாக் பற்றிய ஆய்வு என்ற தலைப்பில், அடுத்த வெபினார் ஜூலை 25- ஆம் தேதி 2020 அன்று காலை 11.00 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
*****
(Release ID: 1639926)
Visitor Counter : 238