விவசாயத்துறை அமைச்சகம்

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஹரியானா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் 16 ஜுலை 2020 வரை 3.5 லட்சம் ஹெக்டேர்களில் வெட்டுக்கிளிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Posted On: 17 JUL 2020 5:17PM by PIB Chennai

11 ஏப்ரல் 2020 முதல் 16 ஜுலை 2020 வரையிலான காலகட்டத்தில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு வட்டார அலுவலகங்கள் (LCOs). மூலமாக 1,76,055 ஹெக்டேர் நிலப்பகுதிகளில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஹரியானா மற்றும் பீகார் மாநிலங்களின் மாநில அரசுகள் 16 ஜுலை 2020 வரை 1,76,026 ஹெக்டேர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

16-17 ஜுலை 2020இன் இரவு நேரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர், ஜோத்பூர், பிக்கானீர், நாகௌர், சூரூ, ஜுன்ஜுனு, சிக்கர், ஜலோர் மற்றும் சிரோகி ஆகிய 9 மாவட்டங்களின் 23 இடங்கள் மற்றும் குஜராத்தின் கஜ் மாவட்டம் ஆகியவற்றில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு வட்டார அலுவலகங்கள் மூலம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனஇதனோடு உத்திரப்பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தில் 2 இடங்கள் மற்றும் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் 1 இடத்தில் சம்பந்தப்பட்ட மாநில வேளாண் துறைகள் 16-17 ஜுலை 2020இன் இரவு நேரத்தில் சிறு சிறு வெட்டுக்கிளிக் குழுக்கள் மற்றும் சிதறிக்கிடக்கும் வெட்டுக்கிளிக் கூட்டங்களுக்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இன்று இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மரில் உள்ள ராம்சர் பகுதியில் வெட்டுக்கிளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தது.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0010YM0.png

  1. ராஜஸ்தான், ஜோத்பூரில் பிசல்பூர் மற்றும் தஞ்சியாவஸ் ஆகிய பகுதிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
  2. உத்திரப்பிரதேசத்தின் பிலிபிட்டில் பிரான்பூர் பகுதியில் ட்ரோன் மூலமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை
  3. ராஜஸ்தான் மாநிலத்தின், ஜோத்பூரின் தடா, டீச்சு பகுதிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
  4. ராஜஸ்தான் மாநிலத்தின், ஜோத்பூரின் தஞ்சியாவஸ் பகுதியில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
  5. ராஜஸ்தான் மாநிலத்தின் நோகா, பிக்கானீர் பகுதிகளில் வெட்டுக்கிளி அழிப்பு
  6. ராஜஸ்தான் மாநிலத்தின் சூரு, அமர்சர் பகுதிகளில் வெட்டுக்கிளி அழிப்பு

 

ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர், ஜோத்பூர், பிக்கானீர், நாகௌர், சூரூ, ஜுன்ஜுனு, சிக்கர், ஜலோர் மற்றும் சிரோகி ஆகிய மாவட்டங்கள், குஜராத்தின் கஜ் மாவட்டம் உத்திரப்பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் இன்று (17-07-2020) முதிர்ச்சி பெறாத ஊதாநிற வெட்டக்கிளிகள் மற்றும் வளர்ந்த மஞ்சள் நிற வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்திருந்தன.



(Release ID: 1639463) Visitor Counter : 182