பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா மற்றும் சீனா இராணுவத்திற்கு இடையிலான கூட்டம் 14 ஜுலை 2020இல் நடைபெற்றது
Posted On:
16 JUL 2020 1:01PM by PIB Chennai
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியில் (LAC) தற்போது நிலவி வரும் சூழலை எதிர் கொள்வதற்கான விவாதங்களை, நிர்ணயிக்கப்பட்ட இராணுவம் மற்றும் இராஜாங்க வழிமுறைகளின்படி இந்தியா மற்றும் சீனா மேற்கொண்டு வருகின்றன.
பிஎல்ஏவின் கமாண்டர்கள், இந்திய இராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதியான சூஷுலில் நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான சந்திப்புக் கூட்டத்தை 14 ஜுலை 2020இல் நடத்தினர். இதற்கு முன்னர் 5 ஜுலை அன்று இந்தியா மற்றும் சீனாவின் சிறப்புப் பிரதிநிதிகளுக்கு இடையில் முழுமையான படை விலகல் குறித்து விவாதிப்பதற்காக ஏற்பட்ட ஒருமித்தக் கருத்தின் தொடர்ச்சியாக இந்த சந்திப்புக் கூட்டமானது நடந்தது.
படை விலகலின் முதல் கட்டத்தின் நடைமுறையாக்கலில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை மூத்த கமான்டர்கள் மீளாய்வு செய்தனர். முழுமையான படை விலகலை உறுதி செய்வதற்காக மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர்.
முழுமையான படை விலகல் என்ற குறிக்கோளில் இரு தரப்பினரும் உறுதிப்பாட்டுடன் இருக்கின்றனர். இந்தச் செயல்முறை சிக்கலானதாகவும், தொடர்ச்சியான சரிபார்ப்புகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவும் இருக்கிறது. ராஜாங்க மற்றும் இராணுவ நிலையிலான தொடர்ச்சியான கூட்டங்களின் மூலமாக அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
****
(Release ID: 1639244)
Visitor Counter : 227
Read this release in:
Marathi
,
Assamese
,
English
,
Urdu
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam