கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

இந்தியாவின் முதலாவதான கேரளத்தில் உள்ள கொச்சி துறைமுக வல்லற்பாதம் முனையத்தில் கப்பல் விட்டு கப்பலுக்கு சரக்கு மாற்றும் மையத்தின் பணிகளை திரு மண்டாவியா ஆய்வு

Posted On: 15 JUL 2020 1:48PM by PIB Chennai

கேரளத்தில் உள்ள கொச்சி துறைமுக வல்லற்பாதம் முனையத்தின் பணிகளை திரு மண்டாவியா ஆய்வுசெய்தார். டி பி ஒர்ல்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இது நாட்டின் முதலாவது கப்பல் விட்டு கப்பலுக்கு சரக்கு மாற்றும் மையமாக உருவெடுத்து வருகிறது.
நாட்டின் முதலாவது கப்பல் விட்டு கப்பலுக்கு சரக்கு மாற்றும் மையம்
மற்றும் ஆசியாவின் முன்னோடி மையமாக உருவெடுத்து வரும் இதன் தொலைநோக்கினை நிறைவு செய்யவும் அது தொடர்பான பல்வேறு சவால்களை எதிர்கொள்ளவும் உரிய அணுகுமுறைகளை வரையுமாறு அதிகாரிகளை திரு மண்டாவியா கேட்டுக் கொண்டார்.
"இந்தியத் துறைமுகத்தில் கப்பல் விட்டு கப்பலுக்கு சரக்கு மாற்றும்
வசதியை ஏற்படுத்தி இந்தியாவின் சரக்கு, கப்பல் விட்டு கப்பல் மாறுவது இந்தியத் துறைமுகத்தில் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. வல்லற்பாதம் முனையம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னுரிமைகளில் ஒன்று " என்று அமைச்சர் திரு மண்டாவியா கூறினார். கப்பல் விட்டு கப்பலுக்கு சரக்கு மாற்றும் மையம் என்பது துறைமுகத்தில் சரக்குப் பெட்டகங்களை தற்காலிகமாக சேமித்து இதர கப்பல்களுக்கு மாற்றி
அவற்றை உரிய இடங்களுக்கு அனுப்புவதற்கான முனையம் ஆகும். உள்ளூரில் வல்லற்பாதம் என்று அழைக்கப்படும் கொச்சி சர்வதேச சரக்குப் பெட்டகக் கப்பல் விட்டு கப்பல் மாற்றும் முனையம் ( சி டி டி ) இந்தியக் கடற்கரைப் பகுதியில் முக்கியத்வம் வாய்ந்த வகையிலான இடத்தில் அமைந்துள்ளது. கப்பல் விட்டு கப்பலுக்கு சரக்கு மாற்றும் மையமாக மேம்படுத்துவதற்கான கீழ்கண்ட நிபந்தனைகள் உட்பட அனைத்து நிபந்தனைகளையும் இது நிறைவய செய்துள்ளது.
சர்வதேச கடல் மார்க்கங்களின் மிக அருகில் இது அமைந்துள்ள இந்தியத் துறைமுகம் இது. இதற்கு சரக்கு அனுப்பக்கூடிய அனைத்து இந்திய துறைமுகங்களுக்கும் குறைந்த கடல் வழித்தூரத்திலியே இது அமைந்துள்ளது முந்த்ரா முதல் கொல்கத்தா வரையிலான இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை துறைமுகங்கள் அனைத்திற்குமான பல வாராந்திர கப்பல் போக்குவரத்து இணைப்புகளைப் பெற்றுள்ளது இது, இந்தியாவின் உட்பகுதிகாலிலுள்ள முக்கியசந்தைகளுக்கும் அருகிலேயே இது
அமைந்துள்ளது. பெரிய கப்பல்களைக் கையாளும் கட்டுமான வசதிகள் இங்கே உள்ளன, தேவைக்கு ஏற்ப திறன் விரிவாக்கத்திற்கான வசதிகளும் இங்கு உள்ளன.

கொச்சி துறைமுகத்தின் வல்லற்பாதம் முனையத்தை தென் இந்தியாவின் மிகவும் விரும்பத் தகுந்த நுழைவாயிலாகவும் தெற்கு ஆசியாவின் முன்னணி கப்பல் விட்டு கப்பலுக்கு மாற்றும் மையமாகவும் மேம்படுத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது.

 

*****


(Release ID: 1639076) Visitor Counter : 282