பாதுகாப்பு அமைச்சகம்

ஆயுதப்படைக்கு முதலீட்டு கொள்முதல் அதிகாரங்களை பாதுகாப்பு அமைச்சகம் அளித்துள்ளது

Posted On: 15 JUL 2020 6:44PM by PIB Chennai

தற்போதைய சூழ்நிலையில், வடக்கு எல்லைக்குப்புறப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், எல்லைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாலும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தலைமையில் சிறப்புக் கூட்டமொன்றை இன்று நடத்தியது.

அவசர செயல்பாட்டு தேவைகளுக்காக, ஆயுதப்படையினருக்கு ரூ.300 கோடி வரை, அவசர முதலீட்டு கொள்முதலை மேற்கொள்வதற்கான அதிகாரங்களை பாதுகாப்பு முதலீட்டு கவுன்சில் அளித்துள்ளது. இதனால் கொள்முதலுக்கான நேரம் குறைவதோடு, கொள்முதல் ஆணைகளை 6 மாத காலத்திற்குள் பிறப்பித்து, ஒரு வருடத்திற்குள் சரக்குகளைப் பெற முடியும்.

 

*****(Release ID: 1639007) Visitor Counter : 144