குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

ஹரியானாவில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய பொருளாதார நடைபாதைத் திட்டங்களுக்கு திரு. கட்காரி அடிக்கல் நாட்டினார்.

Posted On: 14 JUL 2020 5:06PM by PIB Chennai

சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவுகள் துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்காரி, ஹரியானாவில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பொருளாதார நடைபாதைத் திட்டத்தின் கீழ், பல்வேறு நெடுஞ்சாலைத்துறைத் திட்டங்களை இணைய வழியில் ன்று துவக்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு ஹரியானா முதல்வர் திரு மனோகர் லால் தலைமை வகித்தார்.

 

சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளுக்கான மத்திய இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே. சிங்; ஹரியானாவின் துணை முதல்வர் திரு துஷ்யந்த் சவுதாலா; மத்திய அமைச்சர்கள் திரு.ராவ் இந்தர்ஜித், திரு.கிருஷ்ண பால் குர்ஜார், திரு.ரத்தன்லால் கட்டாரியா; இந்திய தேசிய நெடுஞ்சாலை அமைப்பின் தலைவர் திரு எஸ் எஸ் சாந்து; சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள்; ஹரியானா மாநில அரசு அதிகாரிகள் ஆகியோர் இந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001J731.jpg

சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, சிறு, குறு, நடுத்தரத்தொழில் பிரிவுகள் துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு..நிதின் கட்காரி, ஹரியானாவில் புதிய பொருளாதார நடைபாதைத் திட்டத்தின் கீழ், பல்வேறு நெடுஞ்சாலைத்துறைத் திட்டங்களை இணைய வழியில் ன்று துவக்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.

நெடுஞ்சாலை 334Bயில் 1183 கோடி ரூபாய் செலவிலான 35.45 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதை ரோஹ்னா/ஹசன்சங்கர்ஹிலிருந்து ஜாஜார் வரையிலான பகுதி; தேசிய நெடுஞ்சாலை 71இல்,  857 கோடி ரூபாய் மதிப்பிலான 70 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதை பஞ்சாப் ரியானா எல்லையிலிருந்து ஜிண்டு பகுதிவரை; தேசிய நெடுஞ்சாலை 709இல் 200 கோடி ரூபாய் செலவில் 85.36 கிலோமீட்டர் 2 வழிப்பாதை ஜிண்டு -கர்னால்நெடுஞ்சாலை; ஆகிய திட்டங்கள் உட்பட பல திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0020WYV.jpg

 

சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, சிறு, குறு, நடுத்தரத்தொழில் பிரிவுகள் துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு..நிதின் கட்காரி, ஹரியானாவில் புதிய பொருளாதார நடைபாதைத் திட்டத்தின் கீழ், பல்வேறு நெடுஞ்சாலைத்துறைத் திட்டங்களை இணைய வழியில் ன்று துவக்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு.கட்காரி, இந்தத் திட்டங்கள் மூலமாக ஹரியானா மாநில மக்கள், மாநிலத்திற்குள் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், தில்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் எளிதில் பயணத்தொடர்பு கொள்ளமுடியும் என்று கூறினார். தில்லி -மும்பை விரைவு வழிச்சாலை, ஹரியானா மாநிலம் முழுமையையும் உள்ளடக்கிய பொருளாதார நடைபாதை குருகிராம்- ரேவாரி அட்டேலி- நர்ணால் ஆகிய புதிய வரவிருக்கின்ற நெடுஞ்சாலைகள், புதிய இந்தியாவிற்கு வழிவகுக்கும் என்றும், இதனால் ஹரியானாவின் மூலை முடுக்குகளிலும் உள்ள பகுதிகளும் வளர்ச்சியுறும் என்றும் அவர் கூறினார்.

 

விரைவு வழிச்சாலைத் திட்டங்கள், குறிப்பாக புதுதில்லி - மும்பை விரைவு வழிச் சாலை திட்டத்திற்கான பணிகளிலும், சிறு, குறு, நடுத்தரத்தொழில் துறை நிறுவனங்கள் உட்பட தொழில்துறை தொகுப்புகளை உருவாக்குவது; ஸ்மார்ட் நகரங்கள் ஸ்மார்ட் கிராமங்களை உருவாக்குவது; காதி கிராம தொழில் துறைகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளில் ஹரியானா முதல்வர் இணைந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக அனைத்து உதவிகளையும் அளிப்பதாக முதல்வருக்கு அவர் உறுதியளித்தார். சிறு, குறு, நடுத்தரத்தொழில் துறை மூலமாக அடுத்த ஐந்தாண்டுகளில் 5 கோடி வேலைகள் உருவாக்குவது; கதர் கிராமத் தொழில் ஆணையத்தின் தற்போதைய அளவான ஆண்டொன்றுக்கு 88 ஆயிரம் கோடி ரூபாய் என்பதை பன்மடங்கு அதிகரிப்பது ஆகியவை தனது இலக்கு என்று அமைச்சர் தெரிவித்தார்.



(Release ID: 1638591) Visitor Counter : 177