மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் சேருவதற்கான தேர்வு முடிவுகள்
Posted On:
13 JUL 2020 8:57PM by PIB Chennai
மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ஏசி–க்கான துறை சார்ந்த போட்டித் தேர்வு இந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி அன்று நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வின் முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் உடல் தகுதி மற்றும் மருத்துவத் தகுதி தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படுவர். ஒரு தேர்வரின் தேர்வு முடிவு, தில்லி உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கேற்ப வெளியிடப்படாமல் வைக்கப்பட்டுள்ளது.
உடல்தகுதி மற்றும் மருத்துவத் தேர்வுகளுக்கான நாள், நேரம் மற்றும் இடத்தை, தேர்ச்சிப் பெற்ற தேர்வர்களுக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை தனித்தனியே தெரிவிக்கும். தேர்ச்சிப் பட்டியலில், பதிவு எண் இருந்தும் உடல் தகுதி தேர்வுக்கான தகவல் கிடைக்கப் பெறாதவர்கள் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அதிகாரிகளை உடனடியாக அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்தத் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
(Release ID: 1638491)
Visitor Counter : 191