சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உள்ளூர் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக முதன்மைத் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து கூட்டாக இயங்க முடிவு

Posted On: 13 JUL 2020 7:47PM by PIB Chennai

உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகள் (NH) கட்டமைப்பை வழங்குவதற்கான முயற்சியில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அனைத்து IITs, NITs மற்றும் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளை அணுகி, நிறுவன சமூகப் பொறுப்புணர்வு (ISR)) இன் ஒரு பகுதியாக தன்னார்வ அடிப்படையில் அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் (NH) விரிவாக்கவதற்கு ஒத்துழைக்கவும், ஏற்றுக்கொள்ளவும் அணுகியுள்ளது. நாட்டின் சாலை உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவுசார் விவேகத்தைப் பயன்படுத்துவதே இதன் நோக்கம். நிறுவனங்கள் அதன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் உள்ளூர்த் தேவை, இடவியல், வளத்திறன் போன்றவற்றிற்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். இந்த முக்கியமான உள்ளீடுகளை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் முன் கட்டுமானம், கட்டுமானம் மற்றும் செயல்பாட்டின் பல்வேறு கட்டங்களில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பயன்படுத்தலாம். பரவலாக்கப்பட்ட இந்த அணுகுமுறை, முடிவெடுப்பதில் பங்கேற்பு உணர்வை உருவாக்குவதோடு, மாணவர்களுக்கு ஒருங்கிணைந்து கற்றல், உள்ளிருப்புப் பயிற்சிக்கான விருப்பம் மற்றும் எதிர்கால ஆராய்ச்சிக்கு வழிகாட்டுதலாகவும் அமையும், நிறுவனத்தால் விரிவாக்கப்படுவதற்கு முக்கியமான தரவை அணுகுவதற்கான வழியைத் திறக்கிறது, இது தேசிய நெடுஞ்சாலையின் (NH) தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கும் மேம்பட்ட ஆய்வக மற்றும் உருவகப்படுத்துதல் அமைப்புகளின் அடிப்படையில் நிறுவனத்தின் உள்ளூர்த் திறனை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படலாம்.

 

ஒரு நிறுவனத்தால் தேசிய நெடுஞ்சாலைகள் ஏற்றுக்கொள்ளபடும்  போது பங்குதாரர்களின் ஈடுபாட்டை எளிதாக்கும் மற்றும் போக்குவரத்து இயக்கம், நெரிசல் மற்றும் விபத்துக்குள்ளான இடங்களை உடனடியாக அடையாளம் காண்பது போன்ற உள்ளூர்ப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவும். இதன் மூலம் நெடுஞ்சாலைப் பயனர்கள் நிறுவனம் மற்றும் அதிகார சபை மூலம் உள்ளூர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதிக அதிகாரம் பெறுகிறார்கள். தற்போதைய மற்றும் எதிர்காலத் திட்டங்களில் உள்ளூர்த் தேவைகளைப் புரிந்து கொள்வதற்கும், பராமரிப்பு மற்றும் பயண வசதியை மேம்படுத்துவதற்கும், மேம்பட்ட பயனர் அனுபவத்திற்கான வழிகாட்டுதலுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் இத்தகைய நிகழ்வுகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உதவும். இதன் ஒட்டு மொத்த விளைவாக தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பயணிகளின் நண்பனாக அமைவதுடன் சந்தோசமான, சுவராஸ்யமான பயணத்திற்கும் வழிவகுக்கும்.

 

ஏராளமான ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் பொறியியல் கல்லூரிகள் இந்தத் திட்டத்தில் சேரத் தேர்வு செய்யப்பட்டுள்ளன, மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகள் ஆர்வமுள்ள நிறுவனங்களின் இயக்குநர்களுடன் பரஸ்பர ஆலோசனைகளையும் தொடங்கினர். இந்தத் திட்டத்தை நிறுவனமயமாக்குவதற்கும் நாட்டின் சாலை உள்கட்டமைப்பில் சீர்திருத்த மேம்பாடுகளைக் கொண்டு வருவதற்கும் தனிப்பட்ட நிறுவனங்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.

 

***



(Release ID: 1638411) Visitor Counter : 190