அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19 சோதனைக் கருவிகளில் பயன்படுத்தப்படும் மூலக்கூறு ஆராய்ச்சியை ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கிளை அமைப்பு தொடங்கியுள்ளது.

Posted On: 12 JUL 2020 1:39PM by PIB Chennai

இந்திய அரசின் தன்னாட்சி பெற்ற அமைப்பான ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கிளை நிறுவனமான தனியாருக்கு சொந்தமான விஎன்ஐஆர் பயோடெக்னாலஜிஸ் நிறுவனம், ப்ளோரோசன்ஸ் ஆய்வுகள் மற்றும் பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினைள் ஆய்வினை மேற்கொண்டுள்ளது. கோவிட்-19 சோதனை ஆர்டிபிசிஆர் கருவிகளில் பயன்படுத்தப்படும் மூலக்கூறுகளை இது ஆய்வு செய்யக்கூடியாதாகும்.   விஎன்ஐஆர் பயோடெக்னாலஜிஸ் நிறுவனம் கர்நாடக அரசின்  பெங்களூரு பயோ-இன்னோவேசன் மையத்தில் இயங்குகிறது.

விஎன்ஐஆர் இணை நிறுவனர்களான பேராசிரியர் டி. கோவிந்தராஜூ மற்றும் டாக்டர் மெகர் பிரகாஷ் ஆகியோர் ப்ளோரோசன்ஸ் ஆர்டிபிசிஆர் கண்டுபிடிப்பு ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த மூலக்கூறு ஆய்வுகள் கோவிட்-19 பரிசோதனைக் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. பிசிஆர் அடிப்படையிலான சோதனைக் கருவிகள் மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டதாகும் ( ஒலிகோஸ் , நொதிகள், மூலக்கூறு ஆய்வுகள்). முதல் இரண்டும் இந்தியாவில் பகுதியாக கிடைக்கிறதுபகுதி இறக்குமதி செய்யப்படுகிறது. இருப்பினும், கோவிட்-19 சோதனைக் கருவிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மூலக்கூறு ஆய்வுகள் பிசிஆரில் பெருக்கத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. இதன் உடனடிப் பயன்பாடு கோவிட்-19 சோதனைக்குப் பொருந்துகிறது. ஆனால், இது பொதுவாக பல்வேறு நோய்களைக் கண்டறிவதற்கான நோக்கம் கொண்டது.

ஆர்டிபிசிஆர் அடிப்படையிலான கோவிட்-19 சோதனை ஆய்வுகள் , நமது அடிப்படை அறிவியல் அறிவை புதிய உற்பத்திப் பொருள்களுக்கான மேம்பாட்டுக்குப் பயன்படுத்தும் சிறந்த உதாரணமாகும்இதுவரை, இவை இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இது ஒரு குறிப்பிட்ட தொற்றுடன் நின்று விடாமல், வருங்காலத்தில் மற்ற தொற்றுகளுக்கும் மூலக்கூறு ஆய்வுகளை அதிகமாக உருவாக்க உதவும்’’ என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறினார்.

2020 மார்ச் மாதம் உலகின் மற்ற நிறுவனங்களைப் போன்று விஎன்ஐஆர் நிறுவனமும் சிறிது காலம் இயங்கவில்லை. வீட்டில் இருந்த காலத்தின் வாய்ப்பைப் பயன்படுத்தி, விஎன்ஐஆர் குழு கோவிட்-19 பிரச்சினையை சமாளிக்கப் பங்களித்துள்ளது.

*****


(Release ID: 1638184)