எரிசக்தி அமைச்சகம்
தேசிய அனல் மின் கழகம் மதிப்புமிக்க சிஐஐ - ஐடிசி நிலைத்தன்மை விருதுகள் - 2019 ஐ வென்றது
Posted On:
12 JUL 2020 4:35PM by PIB Chennai
கார்ப்பரேட் எக்ஸலன்ஸ் பிரிவில் சிறந்த சாதனைகளின் கீழ், மின் அமைச்சகம் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கழக நிறுவனம் (NTPC) மதிப்புமிக்க CII-ITC நிலைத்தன்மை விருது 2019 ஐ வென்றுள்ளது. மேலும், கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு (CSR) பிரிவில் குறிப்பிடத்தக்க சாதனைக்கான பாராட்டுகளை நிறுவனம் பெற்றுள்ளது.
மின் நிலையங்களைச் சுற்றியுள்ள அதன் சமூகங்களின் நிலையான வளர்ச்சிக்கு NTPC எப்போதும் பாடுபடுகிறது. அதன் முதன்மை CSR திட்டமான GEM (பெண்களுக்கு அதிகாரமளித்தல் இயக்கம்), அதன் மின் நிலையங்களுக்கு அருகிலேயே பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளின் நலனுக்காக, பின்தங்கிய பின்னணியில் இருந்து வரும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஆதரவளிக்க 4 வார குடியிருப்பு திட்டம் நிறுவனத்தால் செயல்படுத்தபட்டுள்ளது.
ஒப்பந்தக்காரர்களின் தொழிலாளர் தகவல் மேலாண்மை அமைப்பை (CLIMS) என்.டி.பி.சி துவக்கியுள்ளது, இதன் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதத்தின் கடைசி நாளில் திட்ட தளங்களில் கட்டணம் செலுத்தப்படுகிறது.
சிஐஐ-ஐடிசி (CII-ITC) நிலைத்தன்மை விருதுகளில் நடைமுறைகளில் சிறந்து விளங்குகின்றன. இது நாட்டில் நிலைத்தன்மையை அங்கீகரிப்பதற்கான மிகவும் நம்பகமான தளமாக கருதப்படுகிறது.
மொத்தம் 62110 மெகாவாட் திறன் கொண்ட நிலையங்களில், என்.டி.பி.சி (NTPC) குழுமத்தில் 70 அனல் மின் நிலையங்கள் உள்ளன, இதில் 24 நிலக்கரி, 7 ஒருங்கிணைந்த சுழற்சி எரிவாயு / திரவ எரிபொருள், 1 ஹைட்ரோ, 13 புதுப்பிக்கத்தக்கவைகள் மற்றும் 25 துணை மின் நிலையங்கள் உள்ளன.
***
(Release ID: 1638178)
Visitor Counter : 220