சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
புதிய வாகனப் பதிவுக்கு முன்பும், தேசிய உரிம வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் போதும் பாஸ்டாக் விவரங்களை உறுதி செய்ய என்ஐசி-க்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவுறுத்தல்.
Posted On:
12 JUL 2020 10:12AM by PIB Chennai
நாடு முழுவதும் புதிய வாகனங்கள் பதிவு அல்லது வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கும் போது பாஸ்டாக் விவரங்களை உறுதி செய்ய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தேசிய தகவலியல் மையம் என்ஐசி-க்கு எழுதியுள்ள கடிதத்தில், (இதன் நகல்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன) வாகன் தளத்துடன் தேசிய மின்னணு சுங்க வசூலிப்பு குறித்த முழு ஒருங்கிணைப்பு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுங்க வசூல் API மே மாதம் 14-ஆம்தேதி நேரடியாக ஒளிபரப்பானது. விஐஎன், விஆர்என் மூலம் வாகன் முறை தற்போது அனைத்து தகவல்களையும் பெற்று வருகிறது.
தற்போது வரை, தேசிய அனுமதி உரிமத்துடன் இயங்கும் வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும்போது பெறுவது போல புதிய வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் பாஸ்டாக் விவரங்களைப் பெறுமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
எம் மற்றும் என் பிரிவு வாகன விற்பனையின் போது, புதிய வாகன பாஸ்டாக் பொருத்துவது 2017 –ஆம் ஆண்டில் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் வங்கிக் கணக்கு, அவை இயங்குவது பற்றிய தகவல்களைத் தெரிவிப்பதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இது தற்போது சரி செய்யப்பட்டு வருகிறது. வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடிகளைக் கடக்கும் போது , மின்னணு ஊடகம் மூலம் பாஸ்டாக் கட்டணத்தை உறுதி செய்வதற்காக பாஸ்டாக் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் ரொக்க வசூலைத் தவிர்க்கலாம். பாஸ்டாக் பயன்பாடு காரணமாக , தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கோவிட் பரவும் வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன.
இந்தத் திட்டம் பற்றிய அரசிதழ் அறிவிக்கை 2017 நவம்பரில் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.
(Release ID: 1638140)
Visitor Counter : 228