மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

தேசிய கடல் வேளாண் தினம்: மீனவர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர் கலந்துரையாடல்.

Posted On: 10 JUL 2020 8:24PM by PIB Chennai

தேசிய கடல் வேளாண் தினம் (National Fish Farmers Day) கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, மத்திய அரசின் மீன் வள அமைச்சகத்தின் கீழ் வரும் மீன் வளத் துறையும் தேசிய மீன் வள வாரியமும் (National Fisheries Development Board) இணைந்து இணையவழிக் கருத்தரங்கை (Webinar) இன்று நடத்தின. இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புபால்வள அமைச்சர் கிரிராஜ் சிங், மீன்வளத் துறை இணையமைச்சர் பி.சி. சாரங்கி, மத்திய அரசின் மீன் வளத்துறைச் செயலாளர் டாக்டர். ராஜீவ் ரஞ்சன்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

மீன் வளத்துறையின் விஞ்ஞானிகளான டாக்டர். கே.எச். அலிகுனி (K. H. Alikunhi), டாக்டர். எச்.எல். சவுத்ரி (H.L. Chaudhury) ஆகியோர் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 10ஆம் தேதி தேசிய கடல்வேளாண் தினம் (National Fish Farmers Day) என்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழிக் கருத்தரங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், அலுவலர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர் ஆகியோருடன் கலந்துரையாடிய மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால் வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், “மீனவர்களின் மீன்வளத் தொழிலின் மேம்பாட்டுக்காக பிரதம மந்திரி மீன் வளத் திட்டம் (Pradhan  Mantri Matsya Sampada Yojana) உருவாக்கப்பட்டுள்ளதுஎன்றார்.

இத்திட்டத்திற்காக வரும் ஐந்தாண்டுகளுக்கு அதிகமான நிதியாக மொத்தம் ரூ. 20,050 கோடி அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நீலப் புரட்சியின் விளைவாக நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் பலன்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், நீலப்புரட்சியை (Neeli Kranti) பொருளாதாரப் புரட்சியாக (Arth Kranti) மாற்றும் வகையிலும்  இத்திட்டம் செயல்படும்.

மீனவர்களின் உற்பத்தி, உற்பத்தித் திறன், தரம், தொழில்நுட்பம், மீன் பிடிப்புக் காலத்தை அடுத்துள்ள கட்டுமானம், மேலாண்மை, நவீனமயமாக்கல், உற்பத்தியின் தரத் தொடர்ச்சி, கண்டறியும் திறன் ஆகியவற்றில் உள்ள குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், மீன் வள மேலாண்மையை வலுவாக்கவும், மீனவர் நலனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


(Release ID: 1637988) Visitor Counter : 192