நித்தி ஆயோக்
தேர்ந்தெடுக்கப்பட்ட 29 உலக அளவிலான குறியீடுகளின் செயல்பாட்டைக் கண்காணிக்க மெய்நிகர் பயிலரங்கை நடத்தியது நிதி ஆயோக்
प्रविष्टि तिथि:
10 JUL 2020 8:11PM by PIB Chennai
சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட 29 உலக அளவிலான குறியீடுகளில் செயல்பாடுகளைக் கண்காணிப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு இணங்க, மத்திய அமைச்சரவைச் செயலாளர் திரு ராஜீவ் கௌபா தலைமையில் 47 மத்திய அமைச்சகங்கள் / துறைகள் பங்கேற்ற மெய்நிகர் பயிலரங்கை நிதிஆயோக் அமைப்பு இன்று நடத்தியது. தொடர்புடைய துறையினரைக் கலந்து ஆலோசிப்பது; வெளீயிட்டு மற்றும் கணக்கெடுப்பு / தகவல் தொகுப்பு ஏஜென்சிகளுடன் ஈடுபாடு கொள்வது; மாநில தரநிலைப் படுத்தலுக்கான கட்டமைப்பு, தகவல் பகிர்தலுக்கான களம் உருவாக்குதல்; மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து இந்தப் பயிலரங்கில் அதிக நேரம் விவாதிக்கப்பட்டது.
பயிலரங்கைத் தொடங்கி வைத்த அமைச்சரவைச் செயலாளர், தரநிலைகளை மேம்படுத்துவதற்காக மட்டுமின்றி, உலக அளவில் இந்தியா குறித்த கண்ணோட்டத்தை மேன்மைப்படுத்துவது, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க சீர்திருத்தங்களை முன்னெடுத்து நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் இந்தக் கண்காணிப்பு நடைமுறை கொண்டு வரப்படுகிறது என்று தெரிவித்தார். இந்தியாவின் குடிமக்கள் சேவை அளிப்புக் கட்டமைப்பில் நிலை மாற்றத்துடன் கூடிய மேம்பாட்டைத் தொடங்கி வைப்பதாக இது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிதிஆயோக், NIC, DPIIT, MoSPI மற்றும் இதர அமைச்சகங்கள் மூலம், இந்த உலகளாவிய குறியீடுகளைக் கண்காணிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்படும் பல்வேறு பின்புலச் செயல்பாடுகள் குறித்து நிதிஆயோக் அமைப்பின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி விவரித்தார். இந்தக் குறியீடுகள் செயல்பாட்டை மேம்படுத்துவதை சீர்திருத்தங்களுக்கான ஆரம்பமாக உருவாக்குவதற்கு, மத்திய மாநில அரசுகள், வெளியீட்டு ஏஜென்சிகள் மற்றும் மக்கள் நலச் சங்க அமைப்புகளுக்கு இடையில் நெருக்கமான மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சமூக, பொருளாதார மற்றும் இதரக் குறியீடுகளில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குறியீடுகள் மூலம் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இந்தியாவின் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டிய மற்றும் கண்காணிக்க வேண்டிய அவசியம் நீண்டகாலமாகவே கூறப்பட்டு வந்தது. சுய மேம்பாட்டுக்கான கருவியாக இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தி, கொள்கைகளில் சீர்திருத்தங்கள் உருவாக்குவது, அரசுத் திட்டங்கள் இறுதிநிலை பயனாளிகளுக்குப் போய்ச் சேருவதை மேம்படுத்துதல் ஆகியவை இதன் இலக்காக இருக்கும்.
19 சர்வதேச ஏஜென்சிகள் வெளியிடும் 29 உலக அளவிலான குறியீடுகள், இந்திய அரசின் 18 முன்னோடி அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு ஒதுக்கப்பட்டன.
செயல்பாடு மற்றும் அனைத்து குறியீடுகளிலும் முன்னேற்றம் குறித்து நிதிஆயோக் கண்காணித்து, வெளியீட்டு ஏஜென்சிகளுடன் ஈடுபாடு ஏற்படுத்த உதவியாக இருக்கும். அடையாளம் காணப்பட்ட முக்கியமான குறியீடுகளைத் தொடர்புடைய அமைச்சகம் / துறை கண்காணித்து, எதிர்பார்க்கும் சீர்திருத்தங்கள் மற்றும் முன்னேற்றம் எட்டப்படுவதை உறுதி செய்யும்.
அனைத்து 29 உலக அளவிலான குறியீடுகளுக்கும், தகவல்களை அளிக்கும் ஒற்றை அறிவிப்புப் பலகை பகுதி உருவாக்கப்பட்டு வருகிறது. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி குறியீடுகளைக் கண்காணிக்க இந்த அறிவிப்புப் பலகை அனுமதிக்கும். வெளியீட்டு ஏஜென்சிகள் பயன்படுத்துவதற்கான தகவல் வள மையமாகவும் இது இருக்கும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளைக் காணிக்கவும் இது உதவிகரமாக இருக்கும். சீர்திருத்தங்களைக் கண்காணிக்கவும் உதவியாக இருக்கும்.
(रिलीज़ आईडी: 1637870)
आगंतुक पटल : 249