சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம், கங்கையின் துணை நதிகளில் மாசுபாட்டைக் கண்காணிப்பதை வலுப்படுத்த உள்ளது

Posted On: 09 JUL 2020 7:20PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் செகாவத் ஆகியோர் முன்னிலையில் அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இரண்டு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மத்திய நீர் ஆணையம் மற்றும் தேசிய நீர் வளர்ச்சி முகமையின் தேசிய அளவிலான திட்டங்கள், பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் ஆகியவைகளுக்கு சுற்றுச்சூழல் / வன அனுமதி அளிப்பது தொடர்பான நிலுவையில் இருக்கும் விஷயங்கள் குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மத்திய நீர் வள அமைச்சகம், கங்கை நதி மற்றும் துணை நதிகளின் மாசுபாட்டைக் கண்காணிக்கும் முறையை வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது போன்றே தூய கங்கைக்கான தேசிய இயக்கத்துடன் இணைந்து நதிநீரின் தரத்தையும் கூர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், இதற்கான பொருத்தமான அமைப்பு உருவாக்கப்படும் என்றும் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

*****



(Release ID: 1637696) Visitor Counter : 195