சுற்றுலா அமைச்சகம்

”நமது தேசத்தைப் பாருங்கள்” தொடரின் கீழ் சுற்றுலா அமைச்சகம் 40-வது வலைதளத் தொடரை ”கியர்களை மாற்றும் இந்தியப் பெண்கள்” என்ற தலைப்பில் வழங்கியது.

Posted On: 06 JUL 2020 4:12PM by PIB Chennai

நமது தேசத்தைப் பாருங்கள் வலைதளத் தொடரில் 40-வது அத்தியாயத்தை, இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், ‘’ கியர்களை மாற்றும் இந்தியப் பெண்கள்’’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்தது. சுற்றுலாவுடன் இணைந்த பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டும் சிலிர்ப்புகளை இது விளக்கியது. இந்தியாவின் இரண்டு பெண் இரு சக்கர வாகன ஆர்வலர்கள் இந்தத் தொடரை நடத்தினர். இரு சக்கர வாகனம் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட வரும், மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்பவர்களை ஊக்குவிக்கும் அமைப்பான நகரும் பெண்கள் அமைப்பின் இணை நிறுவனரும், சுற்றுலா ஊக்குவிப்பாளருமான ஜெய் பாரதி, இரு சக்கர வாகன ஆர்வலர், வலைதள எழுத்தாளர், கதை சொல்லி, மோட்டார் சைக்கிள் சுற்றுலா வழிகாட்டி என பலதுறை நிபுணராக விளங்கும் கான்டிடா லூயிஸ் ஆகியோர் அவர்கள்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வை சுற்றுலா அமைச்சகக் கூடுதல் தலைமை இயக்குநர் திருமிகு. ருபிந்தர் பிரார் நெறிப்படுத்தினார். இரு சக்கர வாகன இந்தியப் பெண் ஆர்வலர்களின் பாதுகாப்பு, இரு சக்கர வாகனம் மூலம் எண்ணற்ற இந்திய நில அமைப்புகளைத் தெரிந்து கொள்ளுதல், தடைகள் ஏதுமின்றி நாடு முழுவதும் அதிகப் பெண்கள் பொறுப்பான பயணத்தை மேற்கொள்ள ஊக்குவிப்பு ஆகிய அம்சங்களை இது கொண்டிருந்தது. ஒரே பாரதம், உன்னத பாரதம் இயக்கத்தின் கீழ், இந்தியாவின் செழுமையான பன்முகத் தன்மையை விளக்கும் முயற்சியாக நமது தேசத்தைப் பாருங்கள் தொடர் அமைந்துள்ளது. மெய்நிகர் தளம் மூலம், ஒரே பாரதம் உன்னத பாரதம் எழுச்சியை இது தொடர்ந்து பரப்பி வருகிறது.

நிகழ்ச்சியில் பேசிய இருவரும், இந்தியப் பெண்கள் இரு சக்கர வாகன சமூகத்தில் மிகவும் பிரபலமானவர்கள். இவர்களது பைக் பயணங்களால், ஆர்வம் கொண்ட மேலும் பல இளம் பெண்களுக்கு முன்மாதிரியாக இவர்கள் திகழ்கின்றனர். தெலங்கானாவைச் சேர்ந்த ஜெய் பாரதி, கட்டடக்கலையைத் தொழிலாகக் கொண்டவர். நகரும் பெண்கள் என்னும் ஆதாயமற்ற அமைப்பை நடத்தி வருகிறார். இது பெண்களுக்கு, இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதில் உதவி வருகிறது. பிகர்னி என்னும் அனைத்து மகளிர் பைக்கர் கிளப்பின் ஹைதராபாத் பிரிவின் தலைவராக அவர் உள்ளார். கான்டிடா லூயிஸ், ஒரு இளம் மோட்டார் சைக்கிள் பயண ஊக்குவிப்பாளர், யுடியூப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் லட்சக்கணக்கான பேர் இவரைப் பின்தொடர்கின்றனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரைச் சேர்ந்த கான்டிடா, தன்னை ஒரு கதை சொல்லி எனக் கூறுகிறார். நாடு முழுவதும் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் பயணம் மேற்கொண்டுள்ள இவர், மிகவும் சிலிர்ப்பூட்டும் வகையில் பயணங்களை மேற்கொள்ளும் வகையில், சுற்றுலா ஆர்வலர்களுக்கு மோட்டார் சைக்கிள் சுற்றுலா வழிகாட்டியாக உதவி வருகிறார்.

வலைதள அமர்வுகள் தற்போது இந்த இணைப்புகளில் கிடைக்கும்.

https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured

http://tourism.gov.in/dekho-apna-desh-webinar-ministry-tourism

https://www.incredibleindia.org/content/incredible-india-v2/en/events/dekho-apna-desh.html

இந்த வலைதளத் தொடரின் அமர்வுகள் இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் கையாளும் அனைத்து சமூக ஊடகங்களிலும் காணக் கிடைக்கும்.

அடுத்த வலைதள நிகழ்ச்சி 2020 ஜூலை 11ஆம் தேதி சனிக்கிழமை, உத்தரகாண்டை ஒரு யோகா மையமாக சித்தரிக்கும் வகையில் இருக்கும்.


(Release ID: 1636833) Visitor Counter : 239