ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநராக டாக்டர் பிஷ்ணு பிரசாத் நந்தா பொறுப்பேற்பு

Posted On: 06 JUL 2020 2:51PM by PIB Chennai

ரயில்வே வாரியத்தின், ரயில்வே சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநராக டாக்டர் பிஷ்ணு பிரசாத் நந்தா, பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ரயில்வே வாரியத்தில் சுகாதாரத்துறையின் தலைமை பொறுப்பில் இணைந்துள்ள  டாக்டர்  பி பி நந்தா, இதற்கு முன்பு தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மருத்துவ இயக்குநராக இருந்தார். 

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின், ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ சேவைகள் தேர்வில், 1983ஆம் ஆண்டு முதலாவதாக தேர்ச்சி பெற்று இந்திய ரயில்வே மருத்துவ சேவைகளில் சேர்ந்தார். 1984 நவம்பரில், தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தின் காரக்பூர் வட்டார மருத்துவமனையில், பணியில் சேர்ந்த டாக்டர் நந்தா, ரயில்வே மருத்துவ பணிகளில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.

தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மருத்துவ இயக்குநராக இருந்த போது, இந்த மண்டலத்தில் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் மின்னணு கொள்முதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


(Release ID: 1636799) Visitor Counter : 193