வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

கோவிட்-19 பாதிப்புக்குப் பிந்தைய காலத்தில் இந்தியா பொருளாதார வளம் பெறுவதை வடகிழக்குப் பிராந்தியம் முன்னெடுத்துச் செல்லும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 04 JUL 2020 5:13PM by PIB Chennai

கோவிட் பாதிப்புக்குப் பிந்தைய காலத்தில், பெருமளவிலான இயற்கை வளம், பெருமளவிலான தொழில் திறன் பயிற்சி பெற்றவர்கள் ஆகிய பலங்களின் மூலம் இந்தியாவின் வளர்ச்சியில் வட கிழக்கு பிராந்தியம் முக்கிய இடம் பெறும் என்று வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித் துறை இணை அமைச்சர்  (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார். கொரோனா நோய் பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்படுவதை அடுத்து பொருளாதார செயல்பாடுகளின் அனைத்து அம்சங்களையும் வட கிழக்குப் பிராந்திய பெண்கள் சக்தி முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். வட கிழக்குப் பிராந்திய சமுதாய ஆதாரவளம் மற்றும் மேலாண்மைத் திட்டத்துடன் (NERCORMP)  தொடர்புடைய பல்வேறு சுய உதவிக் குழுக்களுடன் இணையவழியில் அவர் கலந்துரையாடினார். திரு. நரேந்திர மோடி அரசின் ஐந்தாண்டு கால ஆட்சியில், வளர்ச்சிக்கான முன்மாதிரியாக வட கிழக்குப் பிராந்தியம் உருவானது என்றும், ஆறாவது ஆண்டில் கொரோனா மேலாண்மையில் முன்மாதிரியாக இந்தப் பிராந்தியம் உருவாகியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். அந்தப் பிராந்தியத்தில் அனைத்து 8 மாநிலங்களிலும் நோய்

வடகிழக்குப் பகுதிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி எப்போதும் அதிகபட்ச முன்னுரிமை அளிக்கிறார் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். 2014இல் மோடி அரசு பதவி ஏற்றதும், வட கிழக்குப் பிராந்தியத்தை, நாட்டில் மிக நன்றாக வளர்ச்சி அடைந்த பகுதிகளுக்கு இணையாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த ஆறு ஆண்டுகளில், வளர்ச்சிக்கான இடைவெளிகள் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டதுடன், உளவியல் ரீதியில் அந்தப் பிராந்திய மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றார் அவர்.

சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் தொடர்பு வசதிகள் கணிசமாக அதிகரித்துள்ளன என்றும், இதனால் சரக்குகள் மற்றும் மக்கள் போக்குவரத்து இந்தப் பகுதிக்குள் மட்டுமின்றி நாடு முழுக்கக் கொண்டு செல்வதும் எளிதாகியுள்ளது என்றும் அவர் கூறினார். அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா போன்ற மாநிலங்கள் இதுவரை ரயில்களைப் பார்த்தது கிடையாது. இப்போது தலைநகருடன் இணைக்கும் வகையில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல சிக்கிம் போன்ற மாநிலங்களில் முதன்முறையாக விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0016CKE.jpg



(Release ID: 1636492) Visitor Counter : 178