பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகள் மாநாடு

இடுகை இடப்பட்ட நாள்: 02 JUL 2020 7:51PM by PIB Chennai

இந்திய விமானப்படையின், மூத்த அதிகாரிகள் மாநாட்டை ஜூலை 02 2020 அன்று விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாவ்ரியா பி வி.எஸ்.எம் ஏ.வி.எஸ்.எம் வி.எம் ஏ.டி.சி துவக்கி வைத்தார். தற்போதைய பாதுகாப்பு சுழல் மற்றும் கோவிட்-19 நோய் தொற்று பரவலின் பின்னணியில், முதல் முயற்சியாக காணொலிக் காட்சி மூலம் இந்த மாநாடு நடைபெற்றது.

 

இந்திய விமானப்படையின் கட்டளைகள் மற்றும் துணை அமைப்புகளின் செயல்பாட்டு தயார் நிலையை விமானப்படை தளபதி பாராட்டினார். தற்போதைய மற்றும் எதிர்கால இயக்கத்திற்கான தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் அனைத்துப் பிரிவுகளின் விமானப்படை வீரர்களது ஒருங்கிணைந்த பயிற்சிக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை அவர் வெகுவாகப் புகழ்ந்தார். இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகள் மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாவ்ரியா, நமது விமானப்படை செயல்பாட்டின் வல்லமையை மேலும் மேம்படுத்த வேண்டிய தேவையையும், சிக்கலான அமைப்புகளின் பணிகளில் சேவைத்திறனை சீர்திருத்த  வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இந்திய விமானப்படையை போர்த்திறன்மிக்க சக்தியாக மாற்றுவதற்கு தற்போதுள்ள போர் விமானங்களைப் பராமரித்து வலுவூட்டுவது, மற்றும் புதிதாக சேர்க்கப்படும் போர் விமானங்களை உகந்த அளவிலான செயல்பாட்டிற்கு கொண்டுவருவதன் தேவையையும் விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாவ்ரியா எடுத்துரைத்தார்.

****


(வெளியீட்டு அடையாள எண்: 1636114) வருகையாளர் எண்ணிக்கை : 230
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi