நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 8 கோடி பேர் (தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப் பயனாளிகளில் 10 சதவீதம்) தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பயன்பெறுவர் என மதிப்பீடு; தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இலவசமாக விநியோகிக்க மாதாந்திர ஒதுக்கீட்டில் 10 சதவீதம் என்ற அடிப்படையில், மாதத்துக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு
प्रविष्टि तिथि:
02 JUL 2020 6:28PM by PIB Chennai
தற்சார்பு இந்தியா திட்டத் தொகுப்புகளின் கீழ் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்த பொருளாதார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உணவு, பொது விநியோகத் துறை, 16.05.2020 தேதியிட்ட கடிதத்தின்படி ``தற்சார்பு இந்தியா'' திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை (7 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 1 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை) ஒதுக்கீடு செய்துள்ளது. குடிபெயர்ந்த / வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் / இதர தொழிலாளர்கள் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் அல்லது மாநிலப் பொது விநியோகத் திட்டம் எதிலும் பயன்பெறாத, உதவி தேவைப்படும் நிலையில் உள்ள மற்றவர்களுக்கு, அல்லது தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் உணவு தானியங்களைப் பெற முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இந்த கோவிட்-19 சூழ்நிலையில் வழங்குவதற்காக இந்த உணவு தானியங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் குடிபெயர்ந்த / குடிபெயர்ந்து வெளியிடங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உண்மை நிலையிலான / உத்தேச எண்ணிக்கை குறித்து எந்தத் தகவல் தொகுப்பும், உணவு மற்றும் பொது விநியோகத் துறையிடம் இல்லாத நிலையில், தாராளமாக இருக்கும் வகையில் 8 கோடி பேர் (அதாவது தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் பயனாளிகளில் 10 சதவீதம் பேர் என்ற அடிப்படையில்) என்ற எண்ணிக்கையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பார்கள் என கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு சீரான விநியோகமாக 4 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு (தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட ஒதுக்கீட்டில் 10 சதவீதம்) மாதந்தோறும் அளிக்கப்படுகிறது. குடிபெயர்ந்த / குடிபெயர்ந்து வெளியிடங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 5 கிலோ என்ற அடிப்படையில் 2020 மே மற்றும் ஜூன் என இரு மாதங்களுக்கு தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்குவதற்கு இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும் போது, 8 கோடி பேர் என்ற ஆரம்பகட்ட உத்தேசக் கணக்கீடு தாராளமாக ஏற்கப்பட்ட அளவாக உள்ளது. உண்மையில், யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்ற வகையில் அரசு கருணை அடிப்படையில், தாராளமாக உதவிகள் செய்யும் வகையில், இந்தப் பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்பட்டன. அதன்படி, உணவு தானியங்கள் வழங்கலில் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த ரேஷன் அட்டையும் இல்லாத யாருக்கும் கூடுதல் ரேஷன் வழங்குவதற்கு மாநில அரசுக்கு முழு சுதந்திரம் உள்ளது. எனவே, கூடுதல் உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்யும் பணியை உணவு மற்றும் பொது விநியோகத் துறை சரியாகச் செய்து, நிலைமையின் சவால்களைச் சந்திக்க மாநில அரசுகளுக்கு முழு செயல்பாட்டுச் சுதந்திரம் அளித்துள்ளது.
போன்ற திட்டங்களின் கீழ் பெற்றுள்ளன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. முடக்க நிலை காலத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் பெரிய ஆதரவு அளிப்பதாக இந்தக் கூடுதல் விநியோகம் அமைந்துள்ளது. இலக்கு நோக்கிய பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக வழங்குவதைவிட (2020 மார்ச் 24 முதல் ஜூன் 30 வரையிலான காலம் வரையில்), இது இரண்டு மடங்கிற்கும் அதிகமானதாக உள்ளது.
********
(रिलीज़ आईडी: 1636085)
आगंतुक पटल : 329