அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புக் கொள்கை 2020-ஐ உருவாக்குவதற்கான முதலாவது உயர்மட்டத் தொழில்துறை ஆலோசனைக் கூட்டத்தில் தொழில்துறை முன்னோடிகள் பங்கேற்பு
Posted On:
02 JUL 2020 5:30PM by PIB Chennai
புதிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புக் கொள்கை (STIP) 2020-ஐ உருவாக்குவதற்கான, உயர்மட்ட த் தொழில்துறை வட்டமேஜை ஆலோசனைக் கூட்டத்தினை, STIP-2020 செயலகம், இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் இணைந்து, 2-3 ஜுலை-2020இல், இணையவழியில் நடத்துகிறது. STIP-2020 கொள்கை உருவாக்கும் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகமும், மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையும் இணைந்து, STIP-2020 செயலகத்தை ஏற்படுத்தியுள்ளன.
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே.விஜயராகவன் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த உயர்அதிகாரம் வாய்ந்தவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், அறிவுசார்ந்த பொருளாதாரத்திற்கு வழிவகுக்கக்கூடிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புக்கொள்கை-2020-ஐ உருவாக்குவதற்காக, தொழில்துறை முன்னோடிகளின் ஆலோசனைகளைக் கேட்டறிவதில் கவனம் செலுத்தும். புதிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புக் கொள்கையை ஒருங்கிணைப்பது குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு, தொழில்துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புக் கொள்கையை உருவாக்குவதற்காக, உயர்மட்ட த் தொழில்துறையினரின் ஆலோசனையைக் கேட்டறிவதற்காக நடத்தப்படும் இந்த முதலாவது வட்டம், பரவலாக்கப்பட்ட, கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரையிலான மற்றும் உள்ளடக்கிய வடிவமைப்பு நடவடிக்கைகள், முன்னுரிமைகளை மறுவரையறை செய்யும் நோக்கிலும், துறைவாரியான சிறப்புக் கவனம் செலுத்துதல் மற்றும் ஆராய்ச்சி முறைகள் மற்றும் பெரிய அளவிலான சமூக – பொருளாதார நலனுக்கான தொழில்நுட்ப முன்னேற்றம் போன்றவற்றின் மூலமும் புதிய கொள்கை உருவாக்கப்பட உள்ளது.
*****
(Release ID: 1636081)