குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

குறு சிறு நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கான உத்யம் பதிவு வலைதளம் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது

Posted On: 01 JUL 2020 6:46PM by PIB Chennai

மத்தியகுறு சிறு நடுத்தரத் தொழில் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள
உத்யம் பதிவு வலைதளம் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. 2020 ஜூன் 26ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின் படியான புதிய
வகைப்படுத்துதல் மற்றும் பதிவுசெய்தல் நடைமுறையை ஏற்கனவே தொடங்கியுள்ளது. இதற்கு ஏதுவாக, குறு சிறு நடுத்தரத் தொழில் துறை அமைச்சகம் https://udyamregistration.gov.in என்ற வலை தளத்தை தொடங்கியதுடன், சேம்பியன் கட்டுப்பாட்டு அறைகளிலும், மாவட்ட தொழிலியல் மையங்களிலும் ஒற்றைச் சாளர முறைக்கு ஏற்பாடு செய்துள்ளது.
   இந்தப் புதிய நடை முறை 'வர்த்தகம் புரிதலில் எளிமை'யை மேம்படுத்தி
பரிவர்த்தனை நேரம், செலவினம் ஆகியவற்றையும் மிச்சப்படுத்தும் என்று
அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பதிவு நடைமுறை தவிர வேறு எவ்வித
தனியார் ஆன்லைன் அல்லது ஆப்லைன் அமைப்போ சேவையோ முகமைகளோ அல்லது தனி நபரோ இதற்கு அனுமதிக்கப் படவில்லை என்று அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
         இவ்வகையில், மத்திய குறு சிறு நடுத்தரத் தொழில் துறை அமைச்சகம் கீழ்கண்ட ட்விட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளது
https://twitter.com/msmechampions/status/1278287766963408899?s=09

2. மத்தியகுறு சிறு நடுத்தரத் தொழில் துறை அமைச்சகத்தின் (@minmsme) டுவிட்டர் செய்தி :  பாராட்டுக்கள்! குறு சிறு நடுத்தரத் தொழில் துறைக்கான புதிய பதிவுநடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நீங்கள் உங்கள் தொழில் பிரிவு \ உத்யத்தை https://t.co/oQgGOarGos என்ற தளத்தில் பதிவு செய்யலாம்.ஆலோசனைகள் ஏதுமிருந்தால் தாராளமாகத் தெரிவியுங்கள் .
@msmechampions @PMOIndia https://t.co/cjOZ39nara https://t.co/pqd51R3jOL
https://twitter.com/minmsme/status/1278287967686098945?s=20

3. மத்திய குறு சிறு நடுத்தரத் தொழில் துறை அமைச்சகத்தின் (@minmsme) டுவிட்டர் செய்தி :  குறு சிறு நடுத்தரத் தொழில்களைப் பதிவு செய்வதற்கான விரிவான வலைதளம் இன்று தொடங்கப்பட்டுள்ளத. https://t.co/oQgGOarGos என்ற பெயர் கொண்டுள்ள இந்த வலைதளம் தேசியத்
தகவல் மையத்தின் உதவியுடன் அமைச்சகம் தாமே உருவாக்கியது.
@msmechampions https://t.co/hziUgWEYcQ https://twitter.com/minmsme/status/1278299818696327172?s=20

4. https://twitter.com/msmechampions/status/1278300662736908289?s=09

 


*****


(Release ID: 1635863) Visitor Counter : 209