பாதுகாப்பு அமைச்சகம்
எம்ஐ-17 ஹெலிகாப்டர் மூலம் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பு
Posted On:
30 JUN 2020 9:15PM by PIB Chennai
கடந்த 2020 மே மாதத்தில் வெட்டுக்கிளி பெருக்கத்தால் ஏற்பட்டது போன்று, வெட்டுக்கிளி தாக்குதல் நடந்தால், அவற்றை, ஹெலிகாப்டர் வாயிலாக பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் எம்ஐ-17 ஹெலிகாப்டர்களை மாற்றியமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை மத்திய வேளாண் அமைச்சகம், இங்கிலாந்தைச் சேர்ந்த மிக்ரான் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ளது. ஹெலிகாப்டர்களை மாற்றியமைப்பதற்கான உபகரணங்களை, இந்த நிறுவனம், 2020 செப்டம்பர் மாதம் முதல் இந்திய விமானப்படைக்கு விநியோகிக்கும். இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1635472
(Release ID: 1635564)
Visitor Counter : 164