சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட் போர்வீரர்: உத்தரப்பிரதேசத்தில் கோவிட் போரில் முன்னணியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷாக்கள்)


புலம்பெயர்ந்து திரும்பிய 30.43 லட்சத்திற்கு மேற்பட்டோரை, 1.6 லட்சம் ஆஷாக்கள் கண்காணித்தனர்

Posted On: 30 JUN 2020 12:52PM by PIB Chennai

பஹ்ரைச் நகரைச் சேர்ந்த 20 வயதான சுரேஷ்குமார் (ஹசோர்பூர் பிளாக், நிபூஹி கலா கிராமம்), மும்பை நகரில் உள்ள குளிர் பானம் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அவர், இதர புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஒரு  டிரக்கில் ஐந்து நாட்கள் பயணம் செய்த பின்னர், இந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில் தனது வீட்டுக்குத் திரும்பினார். சுரேஷ் வீட்டுக்குத் திரும்பியதும், உள்ளூர் சமூக சுகாதார ஆர்வலர் (ஆஷா) சந்திரபிரபா அவரைச் சந்தித்து அவரது விவரங்களைப் பதிவு செய்தார். பஹ்ரைச் மாவட்டத்தின் விரைவு தீர்வுக்குழுவுக்கு (ஆர்.ஆர்.டி) அவர் தகவல் கொடுத்ததும் சுரேஷை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. மேலும் அவரது குடும்ப உறுப்பினருக்கு சந்திரபிரபா ஆலோசனைகளை வழங்கி, வீட்டில் தனிமைப்படுத்தலின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார். வழக்கமாக சுரேஷ் வீட்டுக்குத் தொடர்ந்து வருகை தந்த சமூக ஆர்வலர், அவரது குடும்பத்துடன் தொடர்பில் இருந்தார். சந்திரபிரபாவின் விழிப்புணர்வு, ஊக்கத்திறன் மற்றும் ஆதரவு ஆகியவை கோவிட் அறிகுறிகளை சுரேஷ் உணரத் தொடங்குவதை உறுதி செய்ததும், விரைவாக  அவர் சிட்டோராவில் கோவிட் பராமரிப்பு வசதிக்காக அமைக்கப்படுள்ள சமூக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சுரேஷ் குடும்ப உறுப்பினர்களையும், அவரது சக புலம் பெயர்ந்தோர்களையும் கோவிட் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்படுவதை சந்திரபிரபா மேலும் உறுதிசெய்தார்.

நாட்டில் கோவிட்-19 தொடர்பான வைரஸ் தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்நோய்த் தொற்று அதிகம் பாதித்துள்ள பகுதிகளில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு (உபி)  புலம் பெயர்ந்து வருபவர்களின் சுகாதாரப்பராமரிப்புத் தேவைகளை நிறைவு செய்வதும் அதன் கிராமப்புற மக்கள் மத்தியில் வைரஸ் பரவலைத் தடுப்பதும் ஒரு பெரிய சவாலாக உள்ளது. இந்த நெருக்கடியான தருணத்தில், மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஆதரவு அளிப்பதில் ஆஷாக்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

 

 

ஒரு பிரம்மாண்டமான பயிற்சியாக உத்தரப்பிரதேசத்தில் 1.6 லட்சம் ஆஷாக்கள் கிட்டத்தட்ட 30.43 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தோரை 2 கட்டங்களாக கண்டறிந்துள்ளனர். முதல் கட்டத்தில் 11.24 லட்சம் பேரும் இரண்டாம் கட்டத்தில் 19.19 லட்சம் பேரும் கண்டறியப்படுள்ளனர். அவர்களோடு தொடர்புடையவர்களை கண்டறிலிலும், சமூக அளவிலான கண்காணிப்பிலும் ஆஷாக்கள் உதவியுள்ளனர். 7965 நபர்களை அறிகுறிகளுடன் அடையாளம் காட்டியது மட்டுமல்லாமல், அவர்களது உடல்நிலையைக் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தனர். புலம் பெயர்ந்த 2232 நபர்களிடமிருந்து மாதிரிகளை சேகரிப்பதற்கும் அவர்கள் உதவியாக இருந்தனர். புலம் பெயர்ந்தவர்களில் 203 பேர் நபர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் கோவிட் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். அனைத்து கிராமங்களிலும் கிராமத் தலைவரின் கீழ் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழு உறுபினர்கள் / தன்னார்வலர்கள் சமூக ரோந்துப் பணியாளர்கள், ஆஷாக்களுடன் தொடர்புகொண்டு புலம் பெயர்ந்து கிராமத்திற்கு வருபவர்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்கின்றனர். புலம்பெயர்ந்தவர்கள் பின்பற்ற வேண்டிவை குறித்து ஆஷாக்கள் உதவுகின்றனர்.

அங்கன்வாடி மையங்கள் மற்றும் தொடக்கப்பள்ளிகளின்  கட்டடங்களில், சமூகத் தனிமைப்படுத்துதல் மையங்களை மேம்படுத்துவதற்கு உள்ளாட்சித் துறைக்கு ஆஷாக்கள் உதவியுள்ளனர். விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் அதனை நிறுவுவதில் ஆதரவு அளிப்பதன் மூலம் சமூக மட்டத்தில் ஆரோக்யா சேது செயலி பயன்பாட்டை ற்றுக்கொள்வதை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

 (Release ID: 1635392) Visitor Counter : 214