சுற்றுலா அமைச்சகம்

”நமது தேசத்தைப் பாருங்கள்” தொடரின் கீழ் சுற்றுலா அமைச்சகம் 39வது வலைதளத் தொடரை ”கோவிட் காலகட்டத்தில் பாதுகாப்பாகவும், பொறுப்பாகவும் பயணம் மற்றும் சுற்றுலாவை மீண்டும் தொடங்குதல்: சுகாதாரப் பராமரிப்புப் பார்வை” என்ற தலைப்பில் வழங்குகிறது.

Posted On: 29 JUN 2020 3:38PM by PIB Chennai

”நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற வலைதளத் தொடரின் தொடர்ச்சியாக, சுற்றுலா அமைச்சகம் ஜூன் 27, 2020 அன்று கோவிட் இன் போது பாதுகாப்பாகவும், பொறுப்பாகவும் பயணம் மற்றும் சுற்றுலாவை மீண்டும் தொடங்குதல் என்ற தலைப்பில் சமீபத்திய அமர்வை அறிமுகப்படுத்தியது. “ஒரே இந்தியா உன்னத இந்தியா” திட்டத்தின் கீழ் இந்தியாவின் செறிவான பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் ஒரு முயற்சியாக நமது தேசத்தைப் பாருங்கள் என்ற வெபினார் தொடர் அமைந்துள்ளது.

”நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற வலைதளத் தொடரின் 39வது அமர்வு சுற்றுலா அமைச்சகத்தின் ஏ.டி.ஜி திருமதி.ரூபீந்தர் பிராரால் நிர்வகிக்கப்பட்டு, இந்தியப் பொது சுகாதார அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் சந்தீப் பல்லா, கொச்சியில் உள்ள மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையமான அமிர்தாவின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர்.சஞ்சீவ் குமார் சிங், பொது சுகாதார அறக்கட்டளையின் திட்ட அலுவலர் டாக்டர். பரிதி மோடி ஆகியோரால் தொகுத்து வழங்கப்பட்டது. அதில் கோவிட் தொற்றின் போது பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயணம் செய்வது பற்றி பங்கேற்பாளர்களுக்கு விளக்கப்பட்டது. 

கோவிட்-19 உலகளவில் சுகாதாரத்துறையில் மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சியிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இடையூறுகளை உருவாக்கியுள்ளதை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்த அமர்வு தொடங்கப்பட்டது. நோயின் பரவலானது நீண்ட கால அடிப்படையில் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் மீண்டும் வடிவமைக்கும் என்பதையும் புதிய வாழ்கையில் முன்னுரிமைகள் வேறுபட்டதாக மாறபோவதையும் காட்டுகிறது.

இந்தியாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, ஆனால் நேர்மறையான பக்கத்தையும் காணலாம், அதாவது குணமடைந்தவர்களின் விகிதம் தோராயமாக 58.2% உள்ளது. இந்த தொற்றுநோய்க்கு எதிராகப் போராட மாநிலங்கள் பல்வேறு மாதிரிகளைக் கொண்டு வந்துள்ளன, இது நம் நாட்டிற்கும் சாதகமான ஒன்றாகும். இந்த தொற்றுநோயைப் பற்றி அறிய அல்லது கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்பதுடன், பயத்திலிருந்து வெளியேறுவது ஒன்றே இப்போதைய அடிப்படை நோக்கம் / யோசனையாக இருக்கவேண்டும்.

விமான நிலையத்தில் பயண நோக்கத்திற்காகவும், பஸ் மற்றும் போக்குவரத்து துறையிலும், விருந்தோம்பல் நடவடிக்கைகள், உணவுப் பொருள்களை எடுத்துச்செல்லுதல், தனிப்பட்ட சுகாதாரம், துப்புரவு நெறிமுறைகள், சாப்பாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி இந்த அமர்வு சிறப்பித்தது. மன ஆரோக்கியத்திற்காக மக்களுடன் தொடர்பு கொள்ளவும், யோகா மற்றும் தியானத்தைப் பயிற்சி செய்யவும், நமது நேரத்தை "எனது நேரம் நமது நேரம்" என்று செலவழிக்கவும், தொண்டு செய்யவும், வாட்ஸ்அப் மற்றும் போலிச் செய்திகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. தவிர, நாட்டின் பொருளாதாரத்திலும், வேலை வாய்ப்பிலும் மற்றும் தேசத்தின் வளர்ச்சியில் சுற்றுலா ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்பதை இந்த அமர்வு விளக்கியது.

இந்த வலைதளத் தொடரின் நிகழ்வுகள் இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் அனைத்து சமூக ஊடகப் பக்கங்களிலும் காணக் கிடைக்கும்.

நமது தேசத்தைப் பாருங்கள்” வரிசையில் அடுத்த வலைதளத் தொடர் நிகழ்ச்சி  ஜுலை 4, 2020, சனிக்கிழமை அன்று காலை 11:00 மணிக்கு “ஒரு பெண் வாகன ஒட்டுநர்” என்ற தலைப்பில் வெளியாகும்.

*******

 



(Release ID: 1635162) Visitor Counter : 196