உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
இந்தியாவில் உணவு பதப்படுத்தும் தொழில்துறையில் எழுந்துள்ள சவால்களை, வாய்ப்பாக மாற்றுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் அழைப்பு
Posted On:
26 JUN 2020 4:58PM by PIB Chennai
மத்திய அரசின் தேசிய முதலீட்டு மேம்பாடு மற்றும் வசதி முகமையின், இந்தியாவில் முதலீடு அமைப்பின் சார்பில், உணவுப் பதப்படுத்தும் தொழில் பற்றிய இரண்டாவது பிரத்யேகக் கூட்டம், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திருமதி.ஹர்சிம்ரத் கவுர் பாதல் தலைமையில் இன்று (26 ஜுன், 2020) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா மற்றும் பீகார் ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த, கொள்கை முடிவு எடுக்கும் நிலையிலான பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 19 நாடுகளைச் சேர்ந்த 193 தொழில் நிறுவனங்களும் இந்தக் கூட்டத்திலும் பங்கேற்றன.
கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், ஊரங்கு தொடங்கியதிலிருந்தே நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உணவுப் பொருள்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க மத்திய் அரசு மேற்கொண்டுவரும முயற்சிகள் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு வெற்றிகரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றார். விற்பனைக் குறைவு, போதிய தொழிலாளர்கள் கிடைக்காதது, அழுகக்கூடிய பொருள்கள் வீணாவது போன்ற புதிய சவால்கள் எழுந்துள்ள போதிலும், உணவுப் பொருள்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதற்கான, உணவுத் தொழில் நிறுவனங்களுக்கு, மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
உணவுத் தொழிலில் புதிய இயல்பு நிலையை ஏற்படுத்துவதன் மூலம், இதுபோன்ற சவால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டுமெனவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். சுயசார்பு நிலையை அடைய வேண்டுமென்ற பிரதமரின் அழைப்புக்கிணங்க, உள்ளூர்க் குரல்களுக்கு மதிப்பளிக்குமாறும், கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளிடம் திருமதி.பாதல் கேட்டுக் கொண்டார். குறிப்பிட்ட பொருள்கள், இதற்கு முன்பு எந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனவோ, அதுபோன்ற ஒரு ஆதார மையமாக இந்தியா உருவெடுப்பதை, புதிய நாடுகள் எதிர்நோக்குகின்றன. எனவே, உணவுப் பதப்படுத்தும் தொழில் துறையினர் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் வந்துள்ளது. உணவு பதப்படுத்துதல் தொழில்துறையின் நிதியுதவி பெற்று செயல்படும் ஒரு குளிரூட்டும் வசதிகொண்ட சங்கிலித் தொடர் நிறுவனத்திற்கு, காய்கறிகள் மற்றும் பழங்களை அனுப்பி வைக்குமாறு புதிய நாடுகள் தருவிப்பு ஆணைகள் கொடுத்து வருவதாகவும் திருமதி.பாதல் எடுத்துரைத்தார்.
உடனடியாக சாப்பிடக் கூடிய ஆயத்த உணவு வகை தயாரிப்பில் கவனம் செலுத்துமாறும், அனைத்து முதலீட்டாளர்களுக்கும் மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார். இந்தியாவின் தலைசிறந்த உணவுப் பொருள்களை, மேற்கத்திய நாடுகளில் பிரபலப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட அவர், உள்ளூரில் மிகவும் பிரபலமான, ஊட்டச்சத்துள்ள உள்ளூர் உணவுப் பொருள்களுக்கு அடையாளப் பெயர் பெற்று, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியிரை ஈர்க்கும் விதமாக, வெளிநாடுகளைச் சேர்ந்த மிகப்பெரிய சில்லரை விற்பனையாளர்கள் மூலம் அவற்றை சந்தைப்படுத்துமாறும் மாநில அரசுகளை வலியுறுத்தினார்.
இந்தியா முழுவதும் தயாரிக்கப்படும் வேளாண்-உணவுப் பொருள்களை பட்டியலிட ஏதுவாக, தேசிய அளவிலான ஒட்டுமொத்த இணையதளத் தகவு ஒன்றை உருவாக்க, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற இணையத் தகவு, தொழில்துறையினருக்குத் தேவையான மூலப்பொருள்கள் எங்கிருந்து கிடைக்கும் என்பதை அறிந்துகொள்வதோடு, ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவிகரமாக இருக்கும்.
சிறிய அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களை முறைப்படுத்துவதற்காக, 29 ஜுன், 2020 அன்று தொடங்கப்படவுள்ள புதிய திட்டம் குறித்து எடுத்துரைத்த மத்திய அமைச்சர், தங்களது தொழில் பற்றிய புதிய தகவல்களை அறிந்துகொள்ளவும், கடன்வசதிகள் மற்றும் புதிய சந்தை வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் புதிய திட்டம் உதவிகரமாக இருக்கும் என்றார். உணவு பதப்படுத்தும் தொழில் வேலைவாய்ப்புகளில் 74 சதவீதம்அமைப்புசாரா தொழில்துறையில் தான் உள்ளதாக அவர் கூறினார். நமக்குத் தெரிந்த 25 லட்சம் தொழில் பிரிவுகளில் 60 சதவீதம் கிராமப்புறங்களில் தான் உள்ளதாகவும், இந்த நிறுவனங்களில் 80 சதவீதம் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தில் இந்தத் தொழில்துறைக்குத் தான் எதிர்காலம் உள்ளதால், அதற்கான வாய்ப்புகளை வெற்றிகரமாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
*****
(Release ID: 1634996)
Visitor Counter : 518