நிதி ஆணையம்

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய நிதிக்குழு, வேளாண் சீர்திருத்தங்களை செயல்படுத்த மாநிலங்களை ஊக்குவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது .

Posted On: 26 JUN 2020 5:43PM by PIB Chennai

15-வது நிதிக்குழுத் தலைவர் திரு.என்.கே.சிங் தலைமையில், நிதிக்குழு உறுப்பினர்கள்மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திரசிங் டோமர் மற்றும் அத்துறையின் உயர் அதிகாரிகளுடன் நிதிக்குழு இன்று (26 ஜுன், 2020) ஆலோசனை நடத்தியது.   மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக, வேளாண்மை, மீன்வளம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்துறைக்கான கட்டமைப்பு, தளவாட மற்றும் வேளாண் சேமிப்புத் திறன்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில்,   உத்தேச வேளாண் சீர்திருத்தங்கள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்களை மறுஆய்வு செய்வது குறித்துமத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சருடன் இந்த ஆலோசனையை நடத்தியுள்ளது

முன்னதாக.டி.சி. நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.சஞ்சீப் பூரி தலைமையில் நிபுணர் குழு ஒன்றை 15-வது நிதிக்குழு அமைத்திருந்தது.   வேளாண்ஏற்றுமதி தொடர்பாக, நிதிக்குழுக் கூட்டத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட அம்சங்கள் வருமாறு

வேளாண் உற்பத்தியில், உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்வதுடன்பல்வேறு முக்கியமான வேளாண் வகைகளில் உலகின் முன்னணி நாடாகவும் உள்ளதுஇந்தியாவின் மாறுபட்ட வேளாண்பருவநிலைகள், பல்வேறு வகையான பயிர்களின் விளைச்சல் திறனுக்கு உதவுவதோடுஇரண்டு முக்கிய சாகுபடி பருவங்கள் (கரீப் மற்றும் ராபி) மற்றும் குறைந்த கூலிக்குத் தொழிலாளர்கள் கிடைப்பது மற்றும் உற்பத்திச் செலவுகள் குறைவாக இருப்பதால்இந்திய வேளாண்துறை மற்ற நாடுகளுடன் போட்டி போடுவதற்கு வசதியாக உள்ளது

எனினும்வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில், சர்வதேச அளவில் 11-வது இடத்தில் தான் இந்தியா உள்ளது

சாகுபடி செய்வதற்கு உகந்த நிலங்களின் அளவைப் பொறுத்தவரை, இந்தியா சர்வதேச அளவில் முன்னணியில் இருந்தபோதிலும்ஒரு ஹெக்டேர் நிலத்தில் சாகுபடி செய்து ஏற்றுமதி செய்யும் அளவைப் பொறுத்தவரை, சிறிய நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்னிலையில் உள்ளதோடு, குறைவான விளைச்சல், மதிப்புக் கூட்டுதலில் போதிய கவனம் செலுத்தாதது, பெரிய அளவிலான உள்நாட்டுச் சந்தைகளைக் கொண்ட வியட்நாம் போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பது ஆகியவை இந்தியாவிற்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது

பதப்படுத்தப்பட்ட பொருள்கள் ஏற்றுமதியில், இந்தியாவின் பங்கு நிலையாக அதிகரித்து வந்தாலும், பதப்படுத்தப்பட்ட பொருள்களை விட, கச்சா விளைபொருள்கள் ஏற்றுமதி தான் அதிகமாக உள்ளது.

இந்தியாவின் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி, கடந்த 10 ஆண்டுகளாகவே ஏற்ற-இறக்கமாகவே காணப்பட்ட நிலையில்அண்மையில் இது சமநிலையில் உள்ளது

சர்வதேச அளவிலான விலை வீழ்ச்சி, 2014, 2015, 2016-ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட வறட்சி போன்ற காரணங்களால்ஏற்றுமதி அளவு 10 சதவீதம்  குறைந்துள்ளது.   மேலும்,   வேளாண்- உணவு தானிய உற்பத்தி, உள்நாட்டுத் தேவையை விட அதிகமாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள ஒட்டுமொத்த வருடாந்திர வளர்ச்சி வீதக் கண்காணிப்பு அமைப்புஏற்றுமதி செய்வதற்குத் தேவையான உபரி அளவும் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது.   இதுவெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளைக் கைப்பற்றிஅந்நியச் செலாவணியை அதிகளவில் ஈட்டுவதற்கு நம்பிக்கை அளிப்பதோடுஉற்பத்தியாளர்களுக்கும், அவர்களது விளைபொருள்களுக்கும் கூடுதல் விலை கிடைக்க வகை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

•             இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில்,  50 முன்னணிப்  பொருள்களும், வேளாண் விளைபொருள்களும் மட்டும் 75 சதவீதம் உள்ளன .

•             இந்தியா தனது வேளாண் உற்பத்தி மதிப்பில்   70 சதவீதம் அளவிற்கு, 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறதுஐரோப்பிய மற்றும் அமெரிக்கக் கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு கூடுதல் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது.

•             இந்தியா, வெளிநாடுகளிலிருந்து 20பில்லியன் டாலர் அளவிலான வேளாண் விளைபொருள்களை இறக்குமதி செய்தாலும்,  18பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தக உபரி நிலையைத் தொடர்ந்து கடைபிடிக்கிறது.  

இன்றைய கூட்டத்தின்போது, ,  மத்திய அரசு அண்மையில் அறிவித்த (கோவிட் பாதிப்புக்குப் பிறகு) திட்டங்களில், வேளாண்மை தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன்,   நிதிக்குழுவின் 2021-22 முதல் 2025-26 காலகட்டத்திற்குப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ள அம்சங்கள் வருமாறு

•             நிதி ஊக்குவிப்புத் தொகுப்பின் ஒரு பகுதியாக, வேளாண் தொடர்பான சீர்திருத்தங்களின் விவரம்.

•             அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருதல்.

•             வேளாண் உற்பத்தி வியாபாரம் மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி செய்துகொடுத்தல்) அவசரச் சட்டம் 2020.

•             விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் குறித்த விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் அவசரச் சட்டம், 2020.    

வேளாண் துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கொண்டுள்ள விரிவான விவரங்கள் வேளாண் அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டதுவேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை / இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் 2021-22 முதல் 2025-26 வரை  மேற்கொள்ள உள்ள மத்திய அரசுத் திட்டங்களுக்கான பட்ஜெட் தேவைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, நிதிக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது

வேளாண் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய செயல்பாட்டு நிதியுதவி குறித்துநிதிக்குழுவின் 2020-21ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் / பரிந்துரைகள் குறித்தும், இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.   குறிப்பிடத்தக்க அம்சமாக,   நிதிக்குழுவும், வேளாண் அமைச்சகமும் இணைந்து, 15-வது நிதிக்குழு உறுப்பினர் (திரு.ரமேஷ் சந்த்), செயலாளர் (வேளாண்துறை) மற்றும் செயலாளர்(வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை) ஆகியோரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளனஇக்குழு, வேளாண் சீர்திருத்தஙகளை செயல்படுத்தக்கூடிய  துறைகளில்மாநில அரசுகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான நடைமுறைகளை வகுப்பதோடு,   நிதிக்குழுவின் இறுதி அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்களையும் பரிந்துரைக்கும்.                                                                           

                                                                                                                  *****


(Release ID: 1634993) Visitor Counter : 169