விவசாயத்துறை அமைச்சகம்

மத்திய வேளாண்மை கூட்டுறவு விவசாயிகள் நலன் துறை ‘இந்திய வேளாண் துறையில் சீர்திருத்தங்கள், கொள்கை மாற்றங்கள், முதலீட்டு வாய்ப்புகள்’ ஆகியவை குறித்த இரண்டு இணைய வழி கருத்தரங்குகளை நடத்தியது

Posted On: 27 JUN 2020 1:23PM by PIB Chennai

மத்திய வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலன் துறை 25, 26 ஜூன் 2020 தேதிகளில் இரண்டு இணையவழிக் கருத்தரங்குகளை நடத்தியது. முதலாவது கருத்தரங்கு, இந்திய விவசாயத்தில் நிலச்சீர்திருத்தங்கள், விவசாயத் தொழில்களில் உருவாகும் முதலீட்டு வாய்ப்புகள்’, என்ற தலைப்பிலும், இரண்டாவது கருத்தரங்கு, விவசாய சீர்திருத்தங்களில் புதிய விடியல் - மாற்றங்கள் கொள்கை வகுப்பாளர்களின் கண்ணோட்டம்என்ற தலைப்பிலும் நடைபெற்றன. வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறைச் செயலர் திரு.சஞ்சய் அகர்வால்; கால்நடை, பால்பண்ணை துறைச் செயலர் திரு. அப்துல் சதுர்வேதி; மீன் வளத்துறைச் செயலர் டாக்டர் ராஜீவ் ரஞ்சன்; உணவுத்துறை செயலர் திருமதி புஷ்பா சுப்பிரமணியன் ஆகியோர் இந்த கருத்தரங்குகளில் உரையாற்றினர்.

 

கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட நெருக்கடி நிலைமையின் போது வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நலனுக்காக பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையிலான அரசு, புதிய பாதைகளை உருவாக்குவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நெருக்கடி காலத்தின் போதும், இந்திய விவசாயிகள், வேளாண் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். இந்த ஆண்டு கரீஃப் பருவத்தின் போது 316 லட்சம் ஹெக்டேர் நிலம் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ண்டு இதே காலத்தில் 154 லட்சம் ஹெக்டர் நிலம் பெயரிடப்பட்டிருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 187 லட்சம் எக்டர் பயிரிடப்பட்டது என்று அவர் கூறினார்.

 

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவிகிதம் வேளாண் துறையில் இருந்து கிடைக்கிறது. நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதத்தினருக்கு மேற்பட்டவர்களுக்கு வேளாண் துறை வாழ்வாதாரம் அளித்து வருகிறது. வேளாண்துறையில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது என்று திரு சஞ்சய் அகர்வால் வலியுறுத்தினார். அறுவடைக்குப் பிந்தைய கட்டமைப்புக்காக ஒரு லட்சம் கோடி ரூபாயிலான வேளாண் கட்டமைப்பு நிதியம்; பத்தாயிரம் FPO களுக்கான திட்டம்; இதுவரை கேசிசி பெறாத 25 மில்லியன் விவசாயிகளுக்கு கே சி சி வழங்குவதற்கான சிறப்பு திட்டம்; டிஜிட்டல் மயமான வேளாண் சந்தை உருவாகும் வகையிலான, திறமையான வேளாண்மைக்காக, வேளாண் அடுக்கு ஒன்றை ஏற்படுத்துவது; போன்ற பல திட்டங்கள் மூலமாக இந்தியாவில் உள்ள வேளாண் சூழல் மேலும் வலுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார். வேளாண்மையில் சுயசார்பு என்ற தொலைநோக்கு திட்டத்தையும் அவர் முன்வைத்தார். விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டி, நல்ல வாழ்க்கைத் தரத்துடன் வாழும் வகையில், அவர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்குவது; முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேளாண்மைக்கு செல்லுங்கள் என்று வேளாண் துறையை மாற்றுவது; உலகிற்கான உணவுக் கூடையாக இந்தியாவை உருவாக்குவது; போன்றவை குறித்தும் செயலர் கூறினார்.

 

கால்நடை வளர்ப்பு என்பதை ஏடிஎம் இயந்திரத்துடன் ஒப்பிட்டுப் பேசிய கால்நடை பால்பண்ணைத் துறைச் செயலர் திரு.அதுல் சதுர்வேதி சில்லரை வியாபாரிகளிடம் பால் விற்பனையாவதைப் போல, வேறு எந்தப் பொருளும் விரைவில் விற்பனையாவது இல்லை என்று கூறினார். தற்போது 158 மில்லியன் எம்டி டன்னாக உள்ள பால் துறை அடுத்த 5 ஆண்டுகளில் 290 மில்லியன் எம்டி டன்னாக அதிகரிக்கச் செய்வதே நோக்கமாகும் என்று கூறினார். பால் பதப்படுத்தும் துறையில் ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவின் பங்கு தற்போது 30 முதல் 35 சதவீதமாக உள்ளது என்றும், இதை 50 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் செயலர் கூறினார்.

 

மீன்வளத் துறைச் செயலர் டாக்டர் ராஜீவ் ரஞ்சன் பேசுகையில், மீன்வளத்துறை புதிதாக உதயமாகும் துறைகளுள் ஒன்று என்று கூறினார். 2014- 15 முதல் 2018- 19 வரை மீன்வளத்துறை 10.8 7 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது என்றார். மீன் உற்பத்தி 7.53 சதவிகிதமும், மீன் ஏற்றுமதி 9.71 சதவிகிதமும் அதிகரித்துள்ளது என்றும், உலக அளவிலான மீன் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 7.7 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் கூறினார் உலகிலேயே மீன்வளர்ப்பு உற்பத்தியில் இரண்டாவது மிகப்பெரிய நாடாகவும், கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் நான்காவது பெரிய நாடாகவும் இந்தியா உள்ளது என்றும் அவர் கூறினார்.

 

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் துறைக்கான மத்திய அரசின் முக்கிய இலக்குகளையும் டாக்டர் ராஜீவ் ரஞ்சன் எடுத்துக் கூறினார். மீன் உற்பத்தி 2018 -19 இல் 137.58 லட்சம் டன்னாக இருந்தது. 2024- 25 காலத்தில் 220 லட்சம் டன்னாக உயர்த்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சராசரி மீன்வளர்ப்பு உற்பத்தி ஹெக்டேருக்கு 3.3 டன்னாக இருந்தது. 2024- 25ல் இது ஹெக்டேருக்கு 5.0 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீன் ஏற்றுமதி 2024- 25 ஆண்டுக்குள் மேலும் ஒரு லட்சம் கோடி அதிகமான அளவிற்கு இருக்கும். 2028 ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் கோடி அதிகரிக்கும். 2018- 19 இல் 15 லட்சம் என்றிருந்த வேலை வாய்ப்பு 2024- 25 ல் 55 லட்சம் என்று அதிகரிக்கும்.

 



(Release ID: 1634772) Visitor Counter : 355