சுற்றுலா அமைச்சகம்
சுற்றுலா அமைச்சம் ”நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற வெபினார் வரிசைத் தொடரில் ”இந்திய வாகனச் சுற்றுப்பயணம் (வாகனப் பயணச் சுற்றுலா)” என்பதை 38ஆவது வெபினாராக வெளிப்படுத்தி உள்ளது
Posted On:
26 JUN 2020 1:41PM by PIB Chennai
சாகசங்களை எதிர்நோக்குகின்ற மற்றும் ஒரு வாகனத்தின் மூலம் நாட்டைச் சுற்றிப்பார்க்க விரும்புகின்றவர்களிடையே இப்போது ”வாகனச் சுற்றுலாப் பயணம்” பிரபல்யம் அடைந்து வருகிறது. நமது தேசத்தைப் பாருங்கள் என்ற தலைப்பின் கீழ் மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்திவரும் வெபினார் வரிசைத் தொடரில் 25 ஜுன் 2020 அன்று வாகனச் சுற்றுலாப் பயணத்தின் வாய்ப்புகள் (இந்தியாவில் வாகன வழிச் சுற்றுலா) என்ற பொருளில் வெபினார் நடத்தப்பட்டது. நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள சாலைகள் மற்றும் நிலப்பரப்புகளின் பலதரப்பட்ட வலைப்பின்னல்கள் இந்த வெபினாரில் எடுத்துக்காட்டப்பட்டன. “ஒரே இந்தியா உன்னத இந்தியா” திட்டத்தின் கீழ் இந்தியாவின் செறிவான பன்முகத் தன்மையை எடுத்துக்காட்டும் ஒரு முயற்சியாக நமது தேசத்தைப் பாருங்கள் என்ற வெபினார் தொடர் அமைந்துள்ளது.
நமது தேசத்தைப் பாருங்கள் என்ற வெபினார் வரிசைத் தொடரில் 25-06-2020 அன்று நடைபெற்ற 38ஆவது வெபினாரை சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திருமதி ரூபிந்தர் பிரார் ஒருங்கிணைத்தார். மஹிந்திரா & மஹிந்திரா லிமிட்டெட்டின் ஆஃப்-ரோடு ஓட்டுநர் பயிற்சித் திட்டத்தின் தலைவர் மணிஷ் சர்செர் மற்றும் ட்ரைவ்டெக் இந்தியா, ஜே.கே மோட்டார் ஸ்போர்ட்ஸ் & ஃபவுண்டர், செயலாக்கத் தலைவர் ஹரிசிங் ஆகியோர் நிகழ்ச்சியை வழங்கினர்.
உயரமான இடங்களில் ஓட்டுவதற்கு எஸ்யூவி வாகனங்கள் தான் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று நிகழ்ச்சியை வழங்கியவர்கள் பரிந்தரைத்தனர். வாகனத்தை ஓட்டுபவர்கள் எப்படி ஓட்ட வேண்டும் என்ற நுட்பங்களோடு தாங்கள் வைத்திருக்கும் வாகனம் குறித்தும் நன்கு தெரிந்து வைத்திருப்பது என்பது பயணத்துக்கு மிகவும் முக்கியமானது ஆகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சுற்றுலா நிகழ்ச்சி நிரல்கள் குறித்துப் பேசிய போது, இமாலயாவில் நடைபெறும் பிரபலமான மோட்டார் வாகனச் சுற்றுப்பயணத்துக்கு 9-10 நாட்கள் ஆகும் என்பது சுட்டிக் காட்டப்பட்டது. இந்தப் பயணம் சண்டிகரில் தொடங்கி சிம்லா (மதிய உணவுக்கான நிறுத்தம்), நர்கண்டா (ஹந்து கோவிலைப் பார்த்தல் மற்றும் இரவு தங்குதல்), சங்க்லா (2 நாட்கள் தங்குதல் மற்றும் பகல் நேரத்தில் உள்ளூர் இடங்களைச் சுற்றிப்பார்த்தல்), ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் நாக்கோ (டென்ட் கொட்டகை முகாமில் தங்குதல்), காஸா பள்ளத்தாக்கு (இங்குதான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள அஞ்சலகம் உள்ளது – ஹிக்கிம் அஞ்சலகம். இதைப் பார்த்துவிட்டு பிறகு 500 ஆண்டுகள் பழமையான கியூ மம்மி மடாலயத்தைப் பார்த்தல்), மணாலி ஆகிய இடங்களுக்குச் சென்று பிறகு சண்டிகர் திரும்புதல் ஆகும்.
இமாலயாவில் சுற்றுப்பயணத்துக்கு பரிந்துரைக்கப்படும் மற்றொரு சுற்றுலா நிகழ்ச்சி நிரல் என்பது சுமார் 5 நாட்கள் நீடிப்பதாகும். இந்தப் பயணத்தின் வழி சண்டிகர் – சங்கலா காஸா பள்ளத்தாக்கு (2 நாட்கள் தங்குதல்) – மண்டி (2 நாட்கள்) – சண்டிகர் ஆகும்.
வெபினார்களின் நிகழ்வுகள் இப்போது கீழே தரப்பட்டுள்ள லிங்க்குகளில் பார்க்கக் கிடைக்கும்
https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured
http://tourism.gov.in/dekho-apna-desh-webinar-ministry-tourism
https://www.incredibleindia.org/content/incredible-india-v2/en/events/dekho-apna-desh.html
வெபினார்களின் நிகழ்வுகள் இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் அனைத்து சமூக ஊடக ஹேண்டில்களிலும் பார்க்கக் கிடைக்கும்.
“நமது தேசத்தைப் பாருங்கள்” வரிசைத் தொடரின் அடுத்த வெபினார் நிகழ்ச்சி 27 ஜுன் 2020 அன்று காலை 11:00 மணிக்கு நடைபெறும். ”கோவிட் காலகட்டத்தில் பாதுகாப்பாகவும், பொறுப்பாகவும் பயணம் மற்றும் சுற்றுலாவை மீண்டும் தொடங்குதல்: சுகாதாரப் பராமரிப்புப் பார்வை” என்னும் தலைப்பில் நடைபெறும். இதனை இந்திய பொது சுகாதார அறக்கட்டளை வழங்குகிறது. வெபினாரில் பங்குபெற https://bit.ly/UnlockingTourism https://bit.ly/UnlockingTourism என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
*******
(Release ID: 1634537)
Visitor Counter : 182