பாதுகாப்பு அமைச்சகம்
சமுத்திர சேது திட்டத்தின்கீழ், ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல், ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து இந்தியர்களுடன் புறப்பட்டது
Posted On:
26 JUN 2020 11:38AM by PIB Chennai
இந்தியக் கடற்படையின் சமுத்திர சேது திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல், 24 ஜுன், 2020 அன்று மாலை ஈரான் சென்றடைந்து. 25 ஜுன், 2020 அன்று அந்நாட்டு துறைமுகத்திற்குள் சென்றது. கட்டாய மருத்துவ மற்றும் உடமைகள் பரிசோதனைக்குப் பிறகு, 687 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தக் கப்பல் தாயகம் புறப்பட்டது.
ஈரான் சென்றடைந்ததும், ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல் ஊழியர்கள், கப்பலை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துதல் மற்றும் பயணியருக்குத் தேவையான முகக்கவசங்கள், கழிவறை தூய்மைப்படுத்துததல் மற்றும் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்திடமிருந்து வரப்பெற்ற பயணிகள் பட்டியலின்படி, அவர்களுக்குத் தேவையான ஒதுக்கிடம் போன்ற முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர்.
இந்தியக் கடற்படை உள்நாட்டிலேயே தயாரித்த காற்றை வெளியேற்றும் சாதனங்கள் 2-ஐ, ஈரான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
ஜலஷ்வா கப்பலில் பயணியர் தங்கும் பகுதிகள் மூன்றாக பிரிக்கப்பட்டு, கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி, கப்பல் பயணிகள் மற்றும் அவர்களை அடிக்கடி தொடர்பு கொள்ளக் கூடிய கப்பல் மாலுமிகள் என தனித்தனியாகப் பிரித்துப் பயன்படுத்துகின்றனர்.
பயணிகள் அனைவரும் ஏறிய பிறகு, இந்தக் கப்பல், 25 ஜுன், 2020 மாலை பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.
*****
(Release ID: 1634476)
Visitor Counter : 224