எரிசக்தி அமைச்சகம்

ரூ 1 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் ஒப்புதல்களுடன் நிதி ஆண்டு 2019-20-ஐ வலுவான நிலையில் பிஎஃப்சி நிறைவு செய்தது

Posted On: 25 JUN 2020 4:33PM by PIB Chennai

மின்சக்தித் துறையில் இந்தியாவின் முன்னணி வங்கி சாராத நிதி நிறுவனமும், மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத் துறை நிறுவனமுமான பவர் ஃபைனான்ஸ் நிறுவனம் (Power Finance Corporation - PFC), கோவிட்-19 பெரும் பரவல் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இடையிலும், நிதி ஆண்டு 2019-20- (ஏப்ரல்-மார்ச்) வலுவான நிலையில் பிஎஃப்சி நிறைவு செய்தது.

 

ரூ 1 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் ஒப்புதல்களுடனும், சுமார் ரூ. 68,000 கோடி கடன் வழங்குதல்களுடனும் வலிமையான நிதி செயல்திறனை கடந்த நிதி ஆண்டில் இந்தக் கடன் நிறுவனம் வெளிப்படுத்தியது. கோவிட்-19- கட்டுப்படுத்துவதற்கான தேசிய பொதுமுடக்கத்துக்கு இடையிலும், மார்ச் 2020-இன் கடைசி வாரத்தில் ரூ. 11,000 கோடி கடன் வழங்கியது தான் அந்த ஆண்டின் சிறப்பம்சமாகும். வலிமையான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் துணையுடன், பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்த போதும் குறிப்பிடத்தகுந்த இந்தக் கடன் வழங்குதல் சாதனையை பிஎஃப்சியால் செய்ய முடிந்தது.

 

கடந்த வருடத்தின் போது, நிதி அலகுகளில் 16 அடிப்படைப் புள்ளிகள் குறைந்ததை சமாளித்து, மொத்த வருவாயில் 16 சதவீதம் வளர்ச்சியை பவர் ஃபைனான்ஸ் நிறுவனம் அடைந்தது. நிறுவனத்தின் நிகர செயல்படாத சொத்துகள் 4.55 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகக் குறைந்து, அதன் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது. மேலும், கடன் சொத்துகளில் 10 சதவீதம் வளர்ச்சியையும், நிதி செலவுகளில் 16 அடிப்படைப் புள்ளிகள் வீழ்ச்சியும், வட்டிப்பரவலில் 16 அடிப்படைப் புள்ளிகள் வளர்ச்சியையும் நிறுவனம் பதிவு செய்தது. மேலும், கடந்த நிதி ஆண்டின் போது, ரூ 2,700 கோடி மதிப்பிலான ரத்தன் இந்தியா அமராவதி மற்றும் ஜி எம் ஆர் சத்தீஸ்கார் ஆகிய இரண்டு அழுத்தத்துக்குள்ளானத் திட்டங்களுக்கு பவர் ஃபைனான்ஸ் நிறுவனம் தீர்வு கண்டது.

 

சவாலான சூழ்நிலைக்கு இடையிலும், நிதி ஆண்டு 2020க்கான வருடாந்திர நிகர லாபமான ரூ 6788 கோடி, பெருநிறுவன வரி விகிதத்தின் மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட தாமதமான வரி சொத்தின் (DTA) ஒரு முறை தாக்கத்தைத் தவிர்த்து, நிதி ஆண்டு 2019க்கான நிகர லாபமான ரூ 6953 கோடியுடன் ஒப்பிடும் அளவிலேயே இருந்தது. நிதி ஆண்டு 2020-இன் கடைசி 45 நாட்களில் ஏற்பட்ட அசாதாரணமான  6 சதவீத விகித மாற்றத்தின் காரணமாகவும் லாபம் பாதிக்கப்பட்டது.

 

15 சதவீத வருவாய் வளர்ச்சி, 12 சதவீதக் கடன் சொத்து வளர்ச்சி, நிகர செயல்படாத சொத்துகள் 4.20 சதவீதத்தில் இருந்து 3.57 சதவீதமாகக் குறைந்தது ஆகியவை நிதி ஆண்டு 2019-20-இன் (ஒருங்கிணைந்த வகையில்) நிதி சிறப்பம்சங்களாகும்.

 

***



(Release ID: 1634398) Visitor Counter : 135