மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2020-21ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலுக்கான பாதை வரைபடத்தை வெளியிடுகிறது

Posted On: 24 JUN 2020 5:12PM by PIB Chennai

ஆத்மா நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் அடித்தள எழுத்தறிவு, எண் கற்றல் பணி அமைப்பதற்கான முடிவைக் கருத்தில் கொண்டும், மற்றும் கற்றல் வெளிச் செல்லும் மைய அணுகுமுறையை நோக்கி சமாக்ரிக்ஷாவின் கவனத்தைக் கருத்தில் கொண்டும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் தேவையான அடிப்படைகளை உருவாக்கி இவற்றைத் திறம்பட சரியான நேரத்தில் செயல்படுத்துவது அவசியம், இது கற்றல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் நிலைகளில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. இந்த அடிப்படையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் 2020-21ஆம் ஆண்டில் முன்னுரிமையின் அடிப்படையில் பின்வரும் பணிகளை மேற்கொள்ளுமாறு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின், பள்ளிக்கல்வி மற்றும் கல்வியறிவுத் துறை வெளியிட்டுள்ளது.

கற்பிக்கும் முறைகள் The Learning Outcomes (LOs)

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தயாரித்த 1-10 வகுப்புகளுக்கான கற்பிக்கும் முறைகளை செயல்படுத்த:

  1. ஒவ்வொரு பாடங்களையும் விளக்கும் விளக்கப்படங்கள் / சுவரொட்டிகள் / விளக்கக்காட்சிகள், ஒவ்வொரு பாடத்திற்கும், 1 முதல் 5 வரையிலான ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 2020 அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்;  6 முதல் 12 வகுப்புகளுக்கு மார்ச் 2021 க்குள் முடிக்கப்பட வேண்டும்.
  2. 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஒவ்வொரு வகுப்பு ஆசிரியர்களுக்கும் இணைய ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முதல் கட்டமாகவும்; 6 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன், 2021க்குள் இரண்டாம் கட்டமாகவும் முடிக்கப்பட வேண்டும்.
  3. கொவிட் – 19 காரணமாக பள்ளி வந்து ற்க முடியாதவர்களுக்கு முழு பாடத்திட்டத்திற்கும் துணை / மாற்றுக் கல்விகற்றல் பொருளைத் தயாரிக்கவும், குறிப்பாக டிஜிட்டல் / ஆன்லைன் அணுகல் இல்லாதவர்களில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர், 2020க்குள் முதல் கட்டமாகவும், 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன், 2021க்குள் இரண்டாம் கட்டமாகவும் தயாரிக்க வேண்டும்.
  4. ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் கற்றதை அளவிட குறைந்தது இரண்டு நிலைகளில் தேர்ச்சி அடையும் வண்ணம், குறைந்தபட்சம் 10 கேள்விகள் இருக்குமாறு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை நவம்பர் 2020க்குள்ளாகவும், இதர வகுப்புகளுக்கு மார்ச் 2021க்குள்ளும் தயாரிக்கப்பட வேண்டும்.  
  5. தேசிய சாதனைக் கணக்கெடுப்பு, 2017இன் அடிப்படையில், கடினமான பகுதிகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் அடையாளம் கண்டுள்ளது..  கடினமான பகுதிகளைத் தெளிவுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அனைத்து வகுப்பிற்கும் தயாரிக்க வேண்டும்.  1 முதல் 5 வகுப்புகளுக்கு டிசம்பர் 2020க்குள்ளாகவும், மார்ச், 2021க்குள் மீதமுள்ள வகுப்புகளுக்கும் தயாரிக்கப்பட வேண்டும்..

புதிய தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF)

பள்ளிக் கல்விக்கான புதிய தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பும் (என்.சி.எஃப்) தொடங்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலும் புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் படி பாடப்புத்தகங்களில் மாற்றங்களைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாடநெறி வல்லுநர்கள் பள்ளிக்கல்விக்கான இந்த செயல்முறையைத் தொடங்குவதுடன், 2020 டிசம்பருக்குள் இடைக்கால அறிக்கையை வழங்குவார்கள்.

பாடப்புத்தகங்களை மறுவடிவமைப்பு செய்யும் போது, ​​முக்கிய உள்ளடக்கத்தைத் தவிர வேறு எதுவும் பாடப்புத்தகங்களில் சேர்க்கபடவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், பாடப்புத்தகங்களின் அறிவாற்றல் சுமை மிக அதிகம். கூடுதலாக படைப்பு சிந்தனை, வாழ்க்கைத் திறன், இந்திய நெறிமுறைகள், கலை மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற கூடுதல் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். புதிய பாடப்புத்தகங்களின் வடிவமைப்பில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலும் (என்.சி.இ.ஆர்.டி) முன்கூட்டியே வேலை செய்யத் தொடங்கும், இருப்பினும், புதிய பாடப்புத்தகங்கள் புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் (என்.சி.எஃப்) அடிப்படையில் தான் வடிவமைக்கப்படும். புதிய என்.சி.எஃப் மார்ச் 2021 க்குள் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆத்மா நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், பிரதம மந்திரியின் இ-வித்யாவுக்காக, என்.சி.இ.ஆர்.டி, ஸ்வயம் பிரபா அலைவரிசைகளுக்கு (1 வகுப்பு 1 சேனல்) 1 - 12 ஆம் வகுப்புக்கான உள்ளடக்கத்தைத் தயாரித்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் சேனல்களைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

******* 



(Release ID: 1634032) Visitor Counter : 245