பாதுகாப்பு அமைச்சகம்

மாஸ்கோவில் ஊடகத்துடன் தொடர்பு கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கின் செய்தி அறிக்கை.

Posted On: 23 JUN 2020 9:48PM by PIB Chennai

ஜூன் 23, 2020 அன்று மாஸ்கோவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பத்திரிகைக்கு வெளியிட்ட அறிக்கை வருமாறு:

ரஷ்யா மற்றும் முழு உலகிற்குமான மிகவும் புனிதமான வெற்றி நாள் அணிவகுப்பின் 75 வது ஆண்டுவிழாவில் கலந்து கொள்ள ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் நான் மாஸ்கோவில் இருக்கிறேன். இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெறுவதற்காக ரஷ்ய மக்களின் மகத்தான தியாகத்தை நாம் நினைவில் வைத்து அஞ்சலி செலுத்துகிறோம். இந்திய வீரர்கள் லட்சக்கணக்கானவர்கள் இந்தப் போரில் பங்கேற்றதுடன் பெரும் உயிரிழப்புகளை சந்தித்தனர். அவர்களில் பலர் சோவியத் இராணுவத்திற்கு உதவி செய்வதற்காக போரின் ஒரு பகுதியாக இருந்தனர். எனவே, ஒரு இந்திய ராணுவக் குழு நாளை ரெட் சுகுவைரில் அணிவகுத்துச் செல்வது மிகப்பெரிய மரியாதை. இது நம் இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையேயான நிரந்தர நட்பின் அடையாளம்.

மாஸ்கோவிற்கான எனது வருகை, கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் இந்தியாவிலிருந்து செல்லும் முதல் அதிகாரபூர்வத் தூதுக்குழுவின் வெளிநாட்டு விஜயம் ஆகும். இது எங்கள் சிறந்த நட்பின் அடையாளம். தொற்றுநோயின் அனைத்து சிரமங்கள் இருந்தபோதிலும், எங்கள் இருதரப்பு உறவுகள் பல்வேறு மட்டங்களில் நல்ல நிலையில் உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷ்யக் கூட்டமைப்பின் மேதகு ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இந்தியா வருகையை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

இந்தியா-ரஷ்யா உறவுகள் சிறந்த மற்றும் சலுகை பெற்ற போர்த்திறம் வாய்ந்த கூட்டமைப்பாகும். எங்கள் பாதுகாப்பு உறவு அதன் முக்கியமான தூண்களில் ஒன்றாகும். துணைப் பிரதம மந்திரி யூரி போரிசோவ் உடனான சந்திப்பு எங்கள் பாதுகாப்பு உறவை மறுபரிசீலனை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததுடன் தொற்றுநோய்களின் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், என்னைச் சந்தித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனது உரையாடல்கள் மிகவும் நேர்மறையானவை, பயனுள்ளவை. தொடர்ச்சியான ஒப்பந்தங்கள் பராமரிக்கப்படும் என்றும், பல சந்தர்ப்பங்களில் பராமரிக்கப்படுவது குறுகிய காலத்தில் விரைந்து முடிவு எடுக்கப்படும் என்றும் எனக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. எங்கள் திட்டங்கள் அனைத்தும் ரஷ்ய தரப்பிலிருந்து நேர்மறையான பதிலைப் பெற்றுள்ளன. எனது உரையாடல்களில் நான் முழுமையாக திருப்தி அடைகிறேன். இன்று அதிகாலை, நமது பாதுகாப்புச் செயலாளர் அஜய் குமார், அவர்களது துணைப் பாதுகாப்பு அமைச்சர் ஃபோமினுடன் கலந்துரையாடினார். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பு வலுவாக இருக்கிறது என்பதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். எங்கள் பரஸ்பர நலன்கள் திடமானவை, மேலும் எங்கள் சிறந்த நட்புணர்வில் எதிர்கால ஒத்துழைப்பைப் பார்க்கிறோம்.

நாளை 75வது வெற்றி அணிவகுப்பில் பங்கேற்க எதிர்பார்க்கிறேன். எங்கள் பொதுவான பாதுகாப்பிற்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்த ரஷ் மக்களுக்கு, குறிப்பாக படைவீரர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

***


(Release ID: 1633872) Visitor Counter : 240