கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

நீர்வழித் திட்டங்கள் குறித்து திரு.மன்சுக் மாண்டவியா ஆய்வு.

Posted On: 23 JUN 2020 5:01PM by PIB Chennai

மத்திய கப்பல்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. மன்சுக் மாண்டவியா இன்று இந்திய நீர் வழிகள் குறித்த திட்டங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். அமைச்சகத்தின் தனித்துவமான, புதுமையான சிந்தனைத் தளமான ‘தேநீருடன் கலந்துரையாடல்’ கூட்டத்தில் , இந்தியக் கடல்சார் பிரிவில் மாற்றங்கள் பற்றி அதிகாரிகளுடன் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

 

சீபிளேன் (Waterdrome) திட்டங்கள் எனக்கூறப்படும் இவை, நாட்டின் மிக நீண்ட தொலைவு மற்றும் மலைப்பகுதிகளில் இடையூறு இல்லாமல் விரைந்து பயணம் செய்வதற்கு வழிவகை செய்கிறது. உடான் திட்டம் மற்றும் மண்டலத் தொடர்பு வழிமுறைகள் திட்டத்தின் கீழ், இதுவரை 16 மாரக்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சபர்மதி- சர்தார் சரோவர்- ஒற்றுமை சிலை பாதையும் இந்த 16 சீபிளேன் திட்டங்களில் ஒன்றாகும். இதற்கான நீர்ப்பரப்பு ஆய்வுகள் முடிவடைந்து விட்டன.

 

சபர்மதி-நர்மதா ஆறுஒற்றுமை சிலை சீபிளேன் பாதை பயண நேரத்தைக் குறைத்து, சுற்றுலாவை ஊக்குவிக்கக்கூடியதாகும் என திரு. மாண்டவியா தெரிவித்தார். இந்தத் திட்டம் நர்மதா பள்ளத்தாக்கு மற்றும் ஒற்றுமை சிலையை பருந்து பார்வையாகக் காண வழிவகுக்கும். அமெரிக்கா, கனடா, மாலத்தீவுகள் ,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள நீர்வழி முனையக் கட்டமைப்புகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்ட பின்னர், இந்தியாவின் சட்டதிட்ட விதிமுறைகளுக்கு  ஏற்ற நீர்வழி முனையங்களை உருவாக்கத் திட்டம் வகுக்குமாறு அதிகாரிகளுக்கு திரு. மாண்டவியா உத்தரவிட்டார்.

சபர்மதி-ஒற்றுமை சிலை மார்க்கத்தில் 2020 அக்டோபர் மாத வாக்கில் , கடல் விமானங்களை இயக்க சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனம், இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் ஆகியவை இத்திட்டத்தில் கைகோர்க்க வேண்டும் என விரிவான விவாதத்திற்குப் பின்னர் அவர் அறிவுறுத்தினார். இந்திய விமானநிலைய ஆணையத்தின் சார்பில், இந்திய நீர்வழிகள் ஆணையம் கடல் விமானப் பாதைகளுக்கான நீர்ப்பரப்பு மற்றும் ஆழம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வுகள் 2020 செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



(Release ID: 1633709) Visitor Counter : 192