சுற்றுலா அமைச்சகம்

உங்கள் நாட்டைப் பாருங்கள் திட்டத்தின்கீழ், “பாரதம் : ஒரு கலாச்சாரப் பொக்கிஷம்” என்ற தலைப்பிலான 34-வது இணையவழிக் கருத்தரங்கிற்கு மத்திய சுற்றுலாத்துறை ஏற்பாடு

Posted On: 22 JUN 2020 3:25PM by PIB Chennai

உங்கள் நாட்டைப் பாருங்கள் திட்டத்தின் 34-வது அத்தியாயமாக,  “பாரதம்ஒரு கலாச்சாரப் பொக்கிஷம்”  என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கம் (webinar) 20 ஜுன், 2020 அன்று நடைபெற்றதுஇந்தச் சிறப்புக் கருத்தரங்கிற்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.பிரஹலாத் சிங் படேல் தலைமையேற்க,   யோகிஆன்மீகத் தலைவர், கவிஞர் மற்றும் தொலைநோக்குச் சிந்தனையாளருமான சத்குரு ஜக்கி வாசுதேவ்ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.அஜய்சிங்ஓயோ குழும நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு.ரிதேஷ் அகர்வால்,   பிரபல ஆடை வடிவமைப்பாளர்  திருமதி.அனிதா டோங்ரே, பிரபல சமையற்கலை நிபுணர் திரு.ரன்வீர் பிரார்மரியாட் நிறுவன துணைத்தலைவர் (வர்த்தகம்) திருமதி. ரஞ்சு அலெக்ஸ்ஆகியோர் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்மத்திய சுற்றுலாத் துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் திருமதி.ரூபிந்தர் பிரார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்

கருத்தரங்கில் வரவேற்புரையாற்றிய மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் ( தனிப்பொறுப்பு) திரு.பிரஹலாத் சிங் படேல்யோகா கலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடுநமது முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வந்த இந்தப் பாரம்பரியக் கலையை, இந்தியர்களுக்குக் கற்றுக்கொடுத்து, பண்டைக் காலத்திலிருந்தே யோகா குருவாகவும் திகழ்நது வந்துள்ளனர் என்றார்யோகா பயிற்சி மூலம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை உறுதி செய்யுமாறு, நாட்டு மக்களை அயராது ஊக்குவித்து வரும் பிரதமர் திரு.நரேந்திரமோடியின் முயற்சிகளையும் அமைச்சர் வெகுவாகப் பாராட்டினார்.

உங்கள் நாட்டைப் பாருங்கள் என்ற தலைப்பிலான இந்த இணையவழிக் கருத்தரங்கம்,  14 ஏப்ரல் 2020 அன்று தொடங்கப்பட்டுபல்வேறு சுற்றுலா அம்சங்கள் மற்றும் நாடு முழுவதும் இந்தியா அளித்து வரும் சலுகைகள் குறித்து,  34 அமர்வுகளாக விவாதிக்கப்பட்டுள்ளதுஇந்த இணையவழிக் கருத்தரங்கம்மை கவ் இந்தியா யூ டியூப் அலைவரிசையிலும்இன்கிரிடிபிள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.   சுற்றுலா பற்றிய இந்த இணையவழிக் கருத்தரங்கை, மை கவ் இந்தியா, யூ டியூப் அலைவரிசையில் 6, 100 பேரும்இன்கிரிடிபிள் இந்தியா யூ டியூப் அலைவரிசையில் 1,100 பேரும்  ஃபிளைஸ்பைஸ்ஜெட்  டாட் காம் தளத்தில் 4, 300 பேரும் பார்வையிட்டுள்ளனர்.  

உங்கள் நாட்டைப் பாருங்கள் என்ற இந்த இணையவழிக் கருத்தரங்கை நடத்துவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கியதன் மூலம்மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் தேசிய மின்னணு-ஆளுகைப் பிரிவு, இக்கருத்தரங்கை நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்ததுசம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும், டிஜிட்டல் முறையில் இந்தக் கருத்தரங்கைப் பார்வையிடுவதை, அனுபவம் வாய்ந்த குழுவினர் உறுதி செய்தனர்

இந்த இணையவழிக் கருத்தரங்கின் அமர்வுகளை,   https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/   என்ற தளத்தில் வீடியோவாகவும்மத்திய சுற்றுலாத் துறையின் சமூக ஊடகங்களிலும் காணலாம்.                                                                   

 

*****



(Release ID: 1633381) Visitor Counter : 200