சுற்றுலா அமைச்சகம்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம், ‘எனது தேசத்தைப் பார்’ என்ற இணையக் கருத்தரங்கத் தொடரின் கீழ் ‘இந்தியா - யோகா மையம்’ என்ற தலைப்பில் வெளியிட்ட 35வது இணைய கருத்தரங்கு.
Posted On:
22 JUN 2020 3:22PM by PIB Chennai
நமது நாட்டின் பழங்கால ஆரோக்கிய அறிவியலான யோகாவின் பலன்கள் மற்றும் அதன் ஆற்றலை சுற்றுலாத் தயாரிப்பாக வெளிப்படுத்தவும், சுற்றுலாத்துறை அமைச்சகம், ‘இந்தியா - யோகா மையம்’ என்ற தலைப்பிலான இணையக் கருத்தரங்கை, ‘எனது தேசத்தை பார்’ என்ற இணையக் கருத்தரங்கத் தொடரின் கீழ் வழங்கியது. சர்வதேச யோகா தினக் கருத்தரங்கு, தற்போதைய யோகா அமைப்பையும், யோகாவை விரிவுபடுத்துவதையும், இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதையும் சுட்டிக் காட்டியது. ஒரே பாரதம், உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் இந்தியாவின் வளமான பன்முகத் தன்மையை வெளிக்காட்டும் முயற்சி தான் எனது தேசத்தை பார் என்ற இணையக் கருத்தரங்கத் தொடர்.
இந்த வரிசையில் 35வது இணையக் கருத்தரங்கு நிகழ்ச்சியை, ஜூன் 21, 2020ஆம் தேதி அன்று சுற்றுலாத்துறை கூடுதல் தலைமை இயக்குநர் திருமதி. ருபிந்தர் பிரார் தலைமையில், கிரீன் வே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், மகராஷ்டிராவில் உள்ள மகுவா வான் விடுதியின் நிறுவனருமான திரு அச்சல் மெஹ்ரா, வழங்கினார். யோகா ஆசிரியரான அச்சல், மும்பையில் யோகா கற்றுத் தருகிறார். இவர் தனது விடுதியில் தொடர்ச்சியாக யோகா கற்றுத் தருவதோடு, இங்கிலாந்து, மற்றும் பாரீஸில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் யோகா கற்றுக் கொடுத்துள்ளார்.
யோகாவின் பயன்களை முதன் முறையாக மேற்கத்திய நாடுகள் உணர்ந்துள்ளன. தற்போது அவர்கள் ஆரோக்கியத்துறையில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளனர். ஆனால் நமது நாடு, தனது சொந்த யோகா கலாச்சாரத்தின் பயன்களை உணர்ந்து, அதை மேலும் ஒழுங்கமைக்க முயற்சிக்கிறது. இந்தத் தொற்று நேரத்தி்ல் தொழில்நுட்பம், யோகா நிறுவனங்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் மிகவும் அதிகமான பார்வையாளர்களை வழங்கியுள்ளது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, 15.00 மணி முதல் 16.00 மணி வரை பயிற்சியாளர்கள் காணொளிக் காட்சி மூலம் பயிற்சி அளித்தனர். நமது பாரம்பரிய சொத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதை இது காட்டுகிறது. அதனால், நாம், நமது பழங்கால கலாச்சாரத்தையும், பாரம்பரிய யோகாவையும், நலத்தையும் ஆழமாகத் தோண்ட வேண்டும். இந்த தொற்றுக்குப் பின், சிறந்த உடல்நலம் பெறவும் மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் அதன் தயாரிப்புகளில் மாற்றத்தை கொண்டு வரவும் இது உதவும்.
(Release ID: 1633363)
Visitor Counter : 180