அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சூரிய கிரகணம்: அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் சிறுவர், பெண்கள், விஞ்ஞானிகள், ஊழியர்கள் கண்டுகளிப்பு

Posted On: 21 JUN 2020 5:55PM by PIB Chennai

ஞாயிற்றுக்கிழமை (2020, ஜூன் 21) தென்பட்ட சூரிய கிரகணத்தை அதற்கான விசேஷ கண்ணாடி வழியாகக் காண்பதற்கு தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய அரசின் அறிவியல் – தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் தொழில்நுட்பத் தகவல் கவுன்சில் (National Council for Science & Technology Communication) விஞ்ஞான பிரசார் (Vigyan Prasar) இணைந்து இதற்கு ஏற்பாடு செய்திருந்தன.

அங்கு வருகை புரிந்த சிறுவர்கள், பெண்கள், விஞ்ஞானிகள், பல்வேறு பணியாளர்கள், அதிகாரிகள் சூரிய கிரகணத்தைப் பார்த்தனர். சந்திரனின் நிழல் சூரிய ஒளியின் மீது மெல்ல மெல்லப் படிந்து, இருள் பரவுவதையும் அதுவிலகி மீண்டும் சூரிய ஒளி ஏற்படுவதையும் அவர்கள் கண்டு களித்தனர்.

இக்காட்சியைக் காண்பதற்காகவே விசேஷ கண்ணாடிகள் தயாரித்து வழங்கப்பட்டன. சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் நிகழ்வுகள் உடனுக்குடன் அங்கிருந்த பார்வையாளர்களுக்கு விவரிக்கப்பட்டன. சூரிய கிரகணம் பிடிக்கும் ஒவ்வொரு அசைவும் மைலார் ஃபிலிம் (Mylar Film) எனப்படும் ஒருவகை பிலிம்கள் மூலம் புகைப்படங்களாக எடுக்கப்பட்டன.

 

Description: DST - solar eclipse

 

Description: DST - solar eclipse1

 

இந்த முறை சூரிய கிரகணத்தை நேரில் காண்பதற்காக ஆர்வத்துடன் பலர் கவுன்சில் வளாகத்தில் குவிந்திருந்த போதும் கொரானா தொற்று அபாயம் காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தனர். முகக்கவசங்கள் அணிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினர்.

சூரிய கிரகண நிகழ்வுகளை, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் பல்வேறு தன்னாட்சி அமைப்புகளான நைனிடாலில் உள்ள ஆர்யபட்டா அவதானிப்பு அறிவியல் ஆய்வு நிறுவனம் (Aryabhatta Research Institute of Observational Sciences - ARIES), பெங்களூரில் உள்ள இந்திய வான் இயற்பியல் நிறுவனம் (Indian Institute of Astrophysics), விஞ்ஞான் பிரசார் (Vigyan Prasar) ஆகியவை அந்தந்த ஊர்களில் பதிவு செய்து ஸூம் (Zoom), யூ டியூப் (YouTube), ஃபேஸ்புக் (Facebook) ஆகிய தளங்கள் வழியாக உலக அளவில் மக்களுக்கு எடுத்துச் சென்றன.



(Release ID: 1633300) Visitor Counter : 180