அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கோடைகால ஆராய்ச்சி பயிற்சி திட்டத்திற்கு 16,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன

Posted On: 19 JUN 2020 2:25PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்), அதன் கோடைகால ஆராய்ச்சி பயிற்சித் திட்டத்திற்காக (சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.ஆர்.டி.பி) நாடு முழுவதும் இருந்து 16,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. அசாமின் ஜோர்ஹாட்டில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் வடகிழக்கு அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NEIST) இயக்குனர் டாக்டர் ஜி. நரஹரி சாஸ்திரி இதைத் தெரிவித்துள்ளார்.

சி.எஸ்.ஐ.ஆர்- எஸ்.ஆர்.டி.பி (2020)  திட்டத்தின் ஒருங்கிணைப்பு நிறுவனமான CSIR-NEIST ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் துவக்க விழாவில் டாக்டர் சாஸ்திரி பேசினார்.

"இந்த ஆன்லைன் கோடைகால ஆராய்ச்சி பயிற்சித் திட்டமானது, COVID-19 தொற்றுநோயால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் கல்வி சூழ்நிலை மந்தமான நிலைக்கு சென்ற போது ஆலோசிக்கப்பட்டது.. தேசத்தின் கல்வியாளர்களிடையே தொற்றுநோயால் ஏற்பட்ட மந்தநிலையை போக்குவதற்கும், நாட்டில் மாணவ சமுதாயத்தினரிடையே ஆக்கபூர்வமான மனநிலையை மேம்படுத்துவதற்கும், இந்திய கல்வி வரலாற்றில் முதல்முறையாக நடைமுறைப்படுத்தும் இந்த திட்டத்தை செயல்படுத்த டாக்டர் சேகர் சி. மாண்டே CSIR - NEIST க்கு ஆணையை வழங்கியுள்ளதாக டாக்டர் ஜி. நரஹரி சாஸ்திரி கூறினார்.

விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி ஜூன் 5, 2020-லிருந்து ஜூன் 8, 2020 வரை நீட்டிக்கப்பட்டது.. CSIR–NIEST யின் இந்த திட்டத்தில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, இரண்டு நாட்களில் போர்கால அடிப்படையில் ஏராளமாவிண்ணப்பங்களைப் பரிசீலித்து, அவற்றில் தகுதியானவர்களின் பட்டியலை குறுகிய கால அவகாசத்தில் தேர்வு செய்து, ஜூன் 10, 2020 க்குள் வெளியிட்ட கடினமான பணியை நிறைவேற்றிய குழுவினரை. டாக்டர் சாஸ்திரி பாராட்டினார்,

-------



(Release ID: 1632603) Visitor Counter : 162