சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
‘மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த பிராந்திய மையம்’ – திரு தாவர்சந்த் கெலாட்டும், திரு அர்ஜூன் முண்டாவும் இன்று ராஞ்சியில் துவக்கி வைத்தனர்
Posted On:
17 JUN 2020 6:56PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகளுக்கான திறன்மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் வேலைவாய்ப்புக்காக ராஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய மையத்தை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட்டும், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டாவும் இன்று துவக்கி வைத்தனர். திரு தாவர்சந்த் கெலாட், காணொலிக் காட்சி வாயிலாகவும், திரு அர்ஜூன் முண்டா மையத்திற்கு நேரடியாக வருகை தந்தும், அதனை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு கெலாட், இந்த மையம் ஜார்க்கண்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவு செய்யும் என்றும், இது போன்ற ஒருங்கிணைந்த பிராந்திய மையங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் துவக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த மையத்திற்காக 2.5 ஏக்கர் நிலத்தை வழங்கிய ஜார்க்கண்ட் அரசை அவர் பாராட்டினார். தனது அமைச்சகம், இதுவரை, ரூ.1,100 கோடி மதிப்புள்ள உபகரணங்களையும், கருவிகளையும் 17 லட்சம் மாற்றுத்திறனாளி மக்களுக்கு வழங்கியிருப்பதாகவும், 9147 ஏடிஐபி முகாம்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும் மேலும் கூறினார்.
--------
(Release ID: 1632287)
Visitor Counter : 202