ஜல்சக்தி அமைச்சகம்

கர்நாடக மாநிலத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று அம்மாநில முதல்வருக்கு மத்திய அமைச்சர் திரு ஷெகாவத் கடிதம்.

Posted On: 15 JUN 2020 6:15PM by PIB Chennai

கர்நாடக மாநிலத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக அம்மாநில முதல்வருக்கு மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத் எழுதியுள்ள கடிதத்தில் கர்நாடக மாநில முதல்வர் கோவிட்-19 நிலைமையைத் திறம்படக் கையாளுகிறார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

2022-23ஆம் ஆண்டுக்குள் 100 சதவிகித இல்லங்களை, இத்திட்டத்தின் கீழ் கொண்டு வர கர்நாடக மாநிலம் திட்டமிட்டுள்ளது. இதற்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர், கிராமப்புற இல்லங்கள் ஒவ்வொன்றிலும் குழாய் இணைப்பை அளிப்பதற்கு மாநிலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மாநிலத்தில் மொத்தம் 89.61லட்சம் கிராமப்புற இல்லங்கள் உள்ளன. இவற்றுள் 24.41 லட்சம் இல்லங்களுக்கு ஏற்கனவே குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. (எஃப்எச்டிசி) 2019-20ஆம் ஆண்டில் இருபத்தி இரண்டாயிரத்து 133 குழாய் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. .2020-21ஆம் ஆண்டில் 23.57 லட்சம்  இல்லங்களுக்கு குழாய் இணைப்பு வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போதுள்ள குடிநீர் வழங்கும் குழாய் அமைப்பு முறைகளில் 3,139 அமைப்புகளை சீரமைக்கவும், அதிகரிக்கவும், மத்திய அமைச்சர், இந்த ஆண்டு கவனம் செலுத்தியுள்ளார். இதன் மூலம் 23..57 லட்சம் குழாய் இணைப்புகளை அளிக்க முடியும். அதனால் தான் மத்திய அமைச்சர் மாநில முதல்வரை, ‘இயக்க அடிப்படையில் இந்தப் பணிகளை தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இல்லங்களிலேயே குழாய் இணைப்பு கிடைக்கும்.

 

 

கர்நாடக மாநிலத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 2020- 21ஆம் ஆண்டிற்கு 1189.40 கோடி ரூபாய் நிதிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

2019- 20ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 546.06 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், இது கணிசமான அளவு அதிகமாகும். தற்போது மாநிலத்தில் 80.44 கோடி ரூபாய் இருப்பில் உள்ளது. இந்தத் தொகையுடன், இந்த ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 1189.40 கோடி ரூபாயையும் சேர்த்து, அதனுடன் மாநிலத்தின் பங்குத் தொகையையும் சேர்த்து மொத்தம் 2734.03 கோடி ரூபாய், கர்நாடகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இருக்கும்.

 

15வது நிதிஆணையம், பி ஆர் ஐ களுக்கு (PRIs)  வழங்கியுள்ள உதவித் தொகைகளை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். இந்தத் தொகையில் 50 சதவிகிதம் குடிநீர் மற்றும் சுகாதார தூய்மைப் பணிகளுக்காக செலவிடப்பட வேண்டும். 2020-21ஆம் ஆண்டில் நிதிஆணைய உதவியாக மாநிலத்திற்கு 3217 கோடி ரூபாய் கிடைக்கும். கர்நாடகா 100% குழாய் இணைப்பு கொண்ட மாநிலமாக உருவாகும் வகையில், மாநிலம் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, கர்நாடகாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மாநில முதல்வருக்கு உறுதியளித்துள்ளார்.

 

 

****

 



(Release ID: 1631778) Visitor Counter : 183