இந்திய போட்டிகள் ஆணையம்

91 ஸ்ட்ரீட்ஸ் மீடியா டெக்னாலஜீஸ் தனியார் நிறுவனம், (91Streets Media Technologies Private Limited (91Streets)), அசென்ட் ஹெல்த் அண்ட் வெல்னஸ் சொல்யூஷன்ஸ் தனியார் நிறுவனம் (Ascent Health and Wellness Solutions Private Limited (Ascent) ) and API ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனம் API Holdings Private Limited (API) ஆகியவற்றைக் கைப்பற்ற MacRitchie Investments Pte. Ltd. (MacRitchie) மெக்ரிச்சி இன்வெஸ்ட்மென்ட்ஸ் தனியார் நிறுவனத்துக்கு இந்திய வர்த்தகப் போட்டி ஆணையம் (CCI) ஒப்புதல் அளித்துள்ளது.

Posted On: 15 JUN 2020 4:56PM by PIB Chennai

இந்திய வர்த்தகப் போட்டி ஆணையம் (Competition Commission of India - CCI),  91 ஸ்ட்ரீட்ஸ் மீடியா டெக்னாலஜீஸ் தனியார் நிறுவனம், (91Streets Media Technologies Private Limited (91Streets)), அசென்ட் ஹெல்த் அண்ட் வெல்னஸ் சொல்யூஷன்ஸ் தனியார் நிறுவனம் (Ascent Health and Wellness Solutions Private Limited (Ascent) ) and API ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனம் API Holdings Private Limited (API) ஆகியவற்றைக் கைப்பற்ற MacRitchie Investments Pte. Ltd. (MacRitchie) மெக்ரிச்சி இன்வெஸ்ட்மென்ட்ஸ் தனியார் நிறுவனத்துக்கு, காம்படிசன் சட்டம் பிரிவு 31(1)இன் படி, இன்று  ஒப்புதல் அளித்துள்ளது.

 

இந்த உத்தேச இணைப்பு, 91 ஸ்ட்ரீட்ஸ், அசென்ட், API ஆகிய நிறுவனங்களின் கட்டாயமாக மாற்றப்பட வேண்டிய கடன் பத்திரங்கள், கட்டாயமாக மாற்றப்பட வேண்டிய பங்குகள், மற்றும்/அல்லது பொதுப் பங்குகளின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கைப்பற்றுவது தொடர்பானதாகும். 

 

மெக்ரிச்சி இன்வெஸ்ட்மென்ட்ஸ் தனியார் நிறுவனம் என்ற இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் நிறுவனம், டெமாசெக் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்திற்கு, நேரிடையாக அல்லாமல், முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமாகும். 

 

91 ஸ்ட்ரீட்ஸ் இந்தியாவில் நிறுவப்பட்ட நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியா முழுவதும், நேரடியாகவும், தனது துணை நிறுவனங்கள் மூலமாகவும் செயல்பட்டு வருகிறது.   

Ascent இந்தியாவில் நிறுவப்பட்ட நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா முழுவதும், நேரடியாகவும், தனது துணை நிறுவனங்கள் மூலமாகவும் செயல்பட்டு வருகிறது.   

 

API இந்தியாவில் நிறுவப்பட்ட நிறுவனம். இது எந்த வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை.

 

CCI, யின் விரிவான ஆணை தொடரும்.

 

 ****

 



(Release ID: 1631742) Visitor Counter : 190