தேர்தல் ஆணையம்

ஆந்திரப்பிரதேச மேலவைக்கான இடைத்தேர்தல் – ஜூலை 6-ம் தேதி வாக்குப்பதிவு

Posted On: 15 JUN 2020 2:39PM by PIB Chennai

ஆந்திரப்பிரதேச மேலவையில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலவை உறுப்பினராக இருந்த திரு  டோக்கா மனிக்கியா வரப்பிரசாத் இந்த ஆண்டு மார்ச் 9-ம் தேதி பதவி விலகியதையடுத்து, அந்த காலியிடத்திற்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் குறிப்பாணை இம்மாதம் 18-ம் தேதி வெளியிடப்படும் என்றும், வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இம்மாதம் 25 என்றும், வாக்குப்பதிவு ஜூலை 6-ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 6 அன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

----(Release ID: 1631671) Visitor Counter : 20