ஜல்சக்தி அமைச்சகம்
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அருணாச்சலப் பிரதேசத்தின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்க்குழாய் இணைப்புகள்.
प्रविष्टि तिथि:
13 JUN 2020 12:02PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசத்தின் குருங்குமே மாவட்டத்தில் தொலைதூரத்தில் உள்ள மண் சாலை வசதியுடன் கூடிய, ஹிபா கிராமத்துக்கு மழைப் பொழிவுக்கு இடையே குடிநீர்க் குழாய்களைக் கொண்டு சென்றதைப் படம்பிடித்துக் காட்டுகிறது இத்திட்டம். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் (JJM), தொலை தூர கிராமங்கள் உட்பட, அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், பாதுகாப்பான குடிநீர் சீராகக் கிடைப்பதை உறுதி செய்ய, குடிநீர்க்குழாய் இணைப்புகள் (FHTC) வழங்கப்பட வேண்டும். அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள தொலைதூர கிராமம் ஹிபா. தலைநகர் இடாநகரிலிருந்து, நியோபியா தலைமையகமான லாங்கர் வரை கரடுமுரடான சாலை வழியாக 330 கி.மீ. தூரம் சென்று, மேலும் 25 கி.மீதூரம் மண் சாலை வழியாக சென்றதும் கடினமான பயணமாக இருந்தது. ஏற்கனவே உள்ள உயரமான, கரடு முரடான, மோசமான கட்டமைப்புச் சாவல்களுடன், இப்பகுதியில் 7 மாதங்கள் மழை பெய்வது, குடிநீர்க் குழாய்கள் அமைப்பதில் மேலும் சிரமமாக இருந்தது.
இது போன்ற நிலையான மற்றும் கடினமான முயற்சிகளால் ஹாக்கோ, ரெல்லோ மற்றும் சாரா குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 51 வீடுகளுக்கும் குடிநீர்க்குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
(रिलीज़ आईडी: 1631364)
आगंतुक पटल : 270