பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் இ-அலுவலகம்: டாக்டர். ஜிதேந்திர சிங்
Posted On:
12 JUN 2020 5:00PM by PIB Chennai
அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் இ-அலுவலகம் அமைக்க வேண்டும் என்று வடகிழக்கு மாநில வளர்ச்சி, பணியாளர் நலன்,பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று அறிவுறுத்தினார். இது குறித்த இணையக் கருத்தரங்கில் பேசிய அவர் இந்த இ-அலுவலகத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கான “குறைவான அரசு, நிறைவான அரசாட்சி” என்பதை அடைய உதவும் என்று கூறினார். மேலும், நிர்வாகத்தை எளிமைப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட அரசமைப்பு அமைய இது உதவும் என்றும் அவர் தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியாவின் முக்கிய தூண் இந்த இ-அலுவலகத் திட்டம் என்று குறிப்பிட்ட அவர் இதுவரை 55 மத்திய அமைச்சகங்கள் இந்தத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஷில்லாங் பிரகடனத்தைக் குறிப்பிட்ட அமைச்சர் இ-அலுவலகத்தை ஊக்குவிப்பது மற்றும் அதன் சேவைகளின் தரத்தை உயர்த்துவதே அந்தப் பிரகடனத்தின் முக்கிய கூறு என்றும் அதனை செயல்படுத்தும் தருணம் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டார். இதற்கான அனைத்து தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.
வடகிழக்கு மாநில முதல் அமைச்சர்கள், செயலர்கள் உள்ளிட்ட 220 பேர் இந்த வடகிழக்கு மாநிலங்களுக்கான இ-அலுவலக பயிலரங்கில் பங்கேற்றனர்.
(Release ID: 1631195)
Visitor Counter : 223