உள்துறை அமைச்சகம்

தேசிய தலைநகரப் பகுதியில் நில அதிர்வு : “பதட்டப்பட வேண்டாம்” என்று தேசிய நில அதிர்வு மையத்தின் தலைவர் கூறுகிறார்

प्रविष्टि तिथि: 11 JUN 2020 8:55PM by PIB Chennai

 தில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து பதட்டப்பட வேண்டாம் என்று தேசிய நில அதி்ர்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் பி கே பன்சல் கூறியுள்ளார். அதே சமயத்தில் பூகம்பம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேசிய பேரிடர் நிர்வாக ஆணையகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய டாக்டர் பன்சல் தில்லி தலைநகரப் பிராந்தியத்தில் பூகம்ப அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

                                                        -----


(रिलीज़ आईडी: 1631070) आगंतुक पटल : 260
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi