அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் 3 நிறுவனங்கள், இயற்கை குறியீடு 2020 தரப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன

Posted On: 11 JUN 2020 3:59PM by PIB Chennai

மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படும், தன்னாட்சி பெற்ற 3 நிறுவனங்கள் இயற்கை குறியீடு 2020 தரப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன. கொல்கத்தாவில் உள்ள அறிவியல் வளர்ச்சிக்கான இந்திய சங்கம் 7-வது நிலையிலும், பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு நவீன அறிவியல் ஆராய்ச்சி மையம் 14-வது நிலையிலும், கொல்கத்தாவில் உள்ள எஸ்என் போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையம் 30-வது நிலையிலும் உள்ளன.

பல்கலைக்கழகங்கள், இந்தியத் தொழில்நுட்பப் பயிலகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பரிசோதனைச் சாலைகள் உள்ளிட்ட 30 இந்திய நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.   முன்னணி பத்திரிகைகளில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில், இந்தத் தரப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

முழுமையான பட்டியல் விவரங்களுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும்: https://www.natureindex.com/annual-tables/2020/institution/ all/all/ countries-India

-----(Release ID: 1631067) Visitor Counter : 54