மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஆரோக்கிய சேது செயலியை திறம்பட பயன்படுத்துங்கள் : மத்திய இணையமைச்சர் டோட்ரே மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

प्रविष्टि तिथि: 10 JUN 2020 8:10PM by PIB Chennai

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், மனிதவள மேம்பாடு மற்றும் தொலைதொடர்புத் துறை இணை அமைச்சர் திரு சஞ்சய் டோட்ரே, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் ஆரோக்கிய சேது செயலிக் குழு, மகாராஷ்டிர மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேசிய தகவலியல் மையங்களின் அதிகாரிகளுடன் இன்று காணொலிக் காட்சி வாயிலாக உரையாடினார். இதில் அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சரும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும் கலந்து கொண்டனர்.

   மத்திய இணையமைச்சர் திரு சஞ்சய் டோட்ரே, கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான  போரில் ஆரோக்கிய சேது செயலியை பரவலாகப் பயன்படுத்துவது அவசியம் என்றும், அதன் வாயிலாக  கொவிட்-19 தொற்று ஏற்படக் கூடியவர்களை  கண்டறிந்து,  பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.  ஆரோக்கிய சேது செயலியை திறம்பட பயன்படுத்துமாறும் அவர் மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தினார்.

-----


(रिलीज़ आईडी: 1630833) आगंतुक पटल : 281
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Telugu