ஜல்சக்தி அமைச்சகம்
2020-21 –ஆம் ஆண்டில் மத்தியப்பிரதேசத்தில் ஜல்ஜீவன் இயக்கத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு ரூ.1280 கோடிக்கு ஒப்புதல்
Posted On:
10 JUN 2020 6:03PM by PIB Chennai
2020-21-இல் ஜல்ஜீவன் இயக்கத்தை அமல்படுத்துவதற்கான ஆண்டு செயல் திட்டத்தை மத்தியப்பிரதேச மாநில அரசு தேசியக்குழுவின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளது. மாநிலத்தின் செயல்திட்டத்துக்காக நடைபெற்ற கூட்டத்திற்கு ஜல்சக்தி அமைச்சகத்தின், குடிநீர் மற்றும் தூய்மைத் துறைச் செயலர் தலைமை வகித்தார். ஜல்ஜீவன் இயக்கம், மாநிலங்களின் ஒத்துழைப்புடன் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் கிராமப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குறிப்பிட்ட அளவு தரமான குடிநீரை நீண்டகாலத்துக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்த இயக்கம் சேவை விநியோக அடிப்படையை நோக்கமாகக் கொண்டதேயன்றி, கட்டமைப்பு உருவாக்கம் அல்ல.
2020-21-இல் மாநிலத்தில் ஜல்ஜீவன் இயக்கத்தை அமல்படுத்த மத்திய அரசு ரூ.1280 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. செலவழிக்கப்படாத இருப்பு ரூ.244.95 கோடியுடன், இந்த ஆண்டு மத்திய அரசு ஒதுக்கீடு மாநிலத்தின் பங்குக்கு ஈடானதாகும். இந்த ஆண்டு மாநிலத்துக்கு ரூ.3,093 கோடி கிடைக்கும்.
வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய இத்திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேச அரசு, 2023-2024-க்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 1.21 கோடி கிராமப்புற வீடுகளில், ஏற்கனவே, 13.52 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், 26.27 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த உத்தேசித்துள்ள நிலையில், தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகள், தரம் பாதிக்கப்பட்ட பகுதிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதி குடியிருப்புகள், கிராமங்கள், பின்தங்கிய மாவட்டங்கள், சன்சத் ஆதர்ஷ் கிராமின் யோஜனா கிராமங்கள், குறிப்பாக, பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியின பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
(Release ID: 1630815)