ஜல்சக்தி அமைச்சகம்
மேகாலயாவில் ஜல்ஜீவன் இயக்க அமலாக்கம் குறித்து மத்திய அமைச்சர் கவலை தெரிவித்தார்
प्रविष्टि तिथि:
09 JUN 2020 12:39PM by PIB Chennai
மத்திய நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மேகாலயா மாநில முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அந்த மாநிலத்தில் ஜல்ஜீவன் இயக்கத்தை அமல்படுத்தும் பணிகள் மெதுவாக நடப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார். மேகாலயா, 2022 டிசம்பர் மாதத்திற்குள் அங்குள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வசதி அளிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட, முறையாகத் திட்டமிட்டு, உரிய காலத்திற்குள் பணிகளை நிறைவு செய்து, மீதியுள்ள வீடுகளுக்கும் குழாய் இணைப்புகளை அளிக்குமாறு மத்திய அமைச்சர், மேகாலயா முதல்வரை வலியுறுத்தியுள்ளார். அந்த மாநிலத்தில், 3,891 கிராமங்களில் இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் பட்டியலின மக்கள், பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
-----
(रिलीज़ आईडी: 1630433)
आगंतुक पटल : 272